வெளிநாட்டில் காதலன்.. மாணவி கர்ப்பம்.. மருத்துவமனையில் அதிர்ந்த பெற்றோர்..

வெளிநாட்டில் காதலன்.. மாணவி கர்ப்பம்.. மருத்துவமனையில் அதிர்ந்த பெற்றோர்..
 | 

வெளிநாட்டில் காதலன்.. மாணவி கர்ப்பம்.. மருத்துவமனையில் அதிர்ந்த பெற்றோர்..

திருச்சி அருகே இருக்கும் பீமநகரைச் சேர்ந்த 21வயதான கல்லூரி மாணவி குடும்பத்துடன் வசித்து வருகிறார். மாணவியும், அவரது வீட்டின் எதிரே வசிக்கும் இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். இவர்களது காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவரவே, படிப்பு முடிந்த பிறகு இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

வெளிநாட்டில் காதலன்.. மாணவி கர்ப்பம்.. மருத்துவமனையில் அதிர்ந்த பெற்றோர்..

 இந்தநிலையில் மாணவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றப்போது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும், வயிற்றில் சிசு இறந்த நிலையில் இருப்பதை கண்டறிந்து உடனடியாக அதை மருத்துவர்கள் அகற்றினர்.

வெளிநாட்டில் காதலன்.. மாணவி கர்ப்பம்.. மருத்துவமனையில் அதிர்ந்த பெற்றோர்..

இதனால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் ரம்யாவிடம் விசாரித்தனர். அதில் எதிர் வீட்டில் இருக்கும் காதலுடன் தனிமையில் இருந்ததை ரம்யா கூறியுள்ளார். தற்போது அந்த இளைஞர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் சார்பாக கல்லூரி மாணவி ஒருவர் கர்ப்பமாக இருக்கும் தகவலை காவல்துறையில் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் மகளிர் காவலர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான இளைஞர், தானே அவரை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்தார். இதையடுத்து முதற்கட்ட விசாரணை முடித்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP