ஆத்திரத்தில் காதலியின் நிர்வாண புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காதலன்..!

ஆத்திரத்தில் காதலியின் நிர்வாண புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காதலன்..!
 | 

ஆத்திரத்தில் காதலியின் நிர்வாண புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காதலன்..!

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த கலையரசன் என்ற இளைஞர் கடலூர் வண்டிப்பாளையம் பகுதியிலுள்ள தனது அக்கா வீட்டில் தங்கி ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக பழகிய இருவரும் பின்னர் காதலர்களாக பழகியுள்ளனர். மேலும் அவர்களின் பழக்கம் நெருக்கமாகவும் மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரத்தில் காதலியின் நிர்வாண புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காதலன்..!

மேலும் கலையரசன் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அப்பெண் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் திருமணம் செய்ய முடியாது என அப்பெண் உறுதியாக மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கலையரசன் அவர்கள் தனிமையில் இருந்தபோது காதலியை நிர்வாணமாக எடுத்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட அப்பெண்ணின் உறவினர்கள் இதுகுறித்து கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி கலையரசனை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். காதலியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில்  நிர்வாணமாக பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP