காதலித்து ஊர் சுற்றி.. திருமணத்திற்கு மறுத்ததால் காதலி கழுத்தறுத்து கொலை

காதலித்து ஒன்றாக ஊர் சுற்றினர்.. திருமணத்திற்கு மறுத்ததால் காதலி கழுத்தறுத்து கொலை
 | 

காதலித்து ஊர் சுற்றி.. திருமணத்திற்கு மறுத்ததால் காதலி கழுத்தறுத்து கொலை

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷாஹித். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஹரதி என்பவரும் கல்லூரியில் நண்பர்களாக வலம் வந்துள்ளனர். காலப்போக்கில் இருக்கும் நட்பு காதலாக மலர்ந்துள்ளது. இதனால் ஷாஹித்தின் வீட்டிற்கு ஹரதி அடிக்கடி போவதை வழக்கமாக வைத்துள்ளார். இருவரது வீட்டிலும் இவர்களது காதல் தெரிய வந்ததால் ஹரதியின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதற்கு ஹரதி சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த ஷாஹித் எப்படியாவது காதலியை கரம் பிடிக்க போராடிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் தனியாக பேச வேண்டும் என ஹரதியை வீட்டிற்கு அழைத்து சென்றார் ஷாஹித். காதலித்து ஊர் சுற்றி.. திருமணத்திற்கு மறுத்ததால் காதலி கழுத்தறுத்து கொலை

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து பிளேடால் ஹரதியின் கழுத்தை அறுத்துவிட்டால். இதில் ரத்தம் அதிகளவு கொட்டி அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே ஷாஹித் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மத்திய சிறைக்குச்சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் காதலியை கொன்றுவிட்டேன், சிறையில் அடையுங்கள் என கோரியுள்ளான்.

காதலித்து ஊர் சுற்றி.. திருமணத்திற்கு மறுத்ததால் காதலி கழுத்தறுத்து கொலைஇதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறைத்துறை அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் ஹரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் ஷாஹித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP