அஜித் சொன்ன மாதிரி நான் ஒழுங்காக வரி செலுத்துகிறேன்! விஜய்யை வம்புக்கு இழுத்த சிவகார்த்

அஜித் சொன்ன மாதிரி நான் ஒழுங்காக வரி செலுத்துகிறேன்! விஜய்யை வம்புக்கு இழுத்த சிவகார்த்திகேயன் !
 | 

அஜித் சொன்ன மாதிரி நான் ஒழுங்காக வரி செலுத்துகிறேன்! விஜய்யை வம்புக்கு இழுத்த சிவகார்த்திகேயன் !

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் க்ராஃப் ரொம்ப பெருசு. வருமான வரித்துறையினர் ஏஜிஎஸ் நிறுவனத்திலும், மதுரை அன்பு வீட்டிலும் ரெய்டு நடத்தியது எல்லாம் சரி தான். ஆனால் நடிகர் விஜய் படப்பிடிப்பில் இருக்கும் போது, வலுக்கட்டாயமாக அவரை அங்கிருந்து இழுத்து வந்திருக்க தேவையில்லை என்கிறார்கள் திரையுலக பிரமுகர்கள். இத்தனைக்கும் விஜய் வீட்டில் ரெய்டு நடத்துவதென்றால், தாராளமாக அவர்கள் நடத்தியிருக்கலாம். அதற்காக ஏன் படப்பிடிப்பில் இருந்தவரை, அவரது சொந்தக் காரைக் கூட பயன்படுத்த விடாமல் அக்கப்போர் செய்தார்கள் என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கு அரசிடமும் பதில் இல்லை.. திரையுலக சங்கத் தலைவர்களிடத்திலும் பதில் இல்லை.

சரி.. இதுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன சம்மந்தம்? விஜய் வீட்டில் 2 நாட்களாக ரெய்டு நடத்தியும் எதுவும் கிடைக்கலைன்னாலும், அஜித் ரசிகர்கள் விஜய்யை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து தான் வருகிறார்கள். இந்த நேரத்துல அவங்களுக்கு சிவகார்திகேயனுடைய வீடியோ ஒன்னு கிடைச்சிருக்கு. 

அஜித் சொன்ன மாதிரி நான் ஒழுங்காக வரி செலுத்துகிறேன்! விஜய்யை வம்புக்கு இழுத்த சிவகார்த்திகேயன் !

“அஜித் சார் எனக்கு நிறைய அட்வைஸ் கூறியுள்ளார், அதில் முக்கியமா மத்தவங்களைப் போல இல்லாம வருமான வரியை ஒழுங்கா கட்டு’ என்று எனக்கு அறிவுரை கூறியிருக்கிறார். அஜித் சார் சொன்னபடி நான் தற்போது ஒழுங்கா வரி கட்டுறேன் ” என்று நெகிழ்ச்சியுடன் சிவகார்த்திகேயன் பேசுற வீடியோவை கொலை வெறியோடு ஷேர் செய்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். கூடவே அஜித்தைப் பார்த்து இனியாவது விஜய் கற்றுக் கொள்ளட்டும் என்கிற மெஸேஜ் வேறு!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP