தர்பார் ஆடியோ வெளியீட்டில் கமல்ஹாசன் குறித்த சர்ச்சை பேச்சு.. விளக்கம் அளித்த லாரன்ஸ்..

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சினிமா திரையுலகில் ரசிகர்களால் எதிரிகளாக பார்க்கப்பட்டார்களே தவிர, அவர்கள் இருவரும் திரைக்கு வெளியே நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே..
 | 

தர்பார் ஆடியோ வெளியீட்டில் கமல்ஹாசன் குறித்த சர்ச்சை பேச்சு.. விளக்கம் அளித்த லாரன்ஸ்..

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சினிமா திரையுலகில் ரசிகர்களால் எதிரிகளாக பார்க்கப்பட்டார்களே தவிர, அவர்கள் இருவரும் திரைக்கு வெளியே நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.. 

நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன் இடையேயான உறவை முறிக்க பலர் திட்டமிட்டாலும், இன்று வரை உண்மையான நட்புடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தர்பார் வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் குறித்து பேசிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் பட இசை வெளியீட்டு விழா கடந்த 7ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் லாரன்ஸ்,சீமானின் பேச்சு நாட்டிற்கு நல்லது அல்ல என்று சீமான் குறித்து விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், ரஜினியின் மீதான ஈர்ப்பை கூறும் போது, சிறுவயதில் கமல் படத்தின் போஸ்டர்கள் மீது சாணியடித்ததாகவும் குறிப்பிட்டார். இதற்கு, சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், தனது பேச்சுக்கு ராகவா லாரன்ஸ் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில், ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு...

தர்பார் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கமல் சார் படத்தின் போஸ்டர் மீது சாணியடித்திருக்கிறேன் என்று பேசியதை மட்டும் எடுத்துக்கொண்டு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நிகழ்ச்சியின் முழு வீடியோவை பார்த்தால் அர்த்தம் புரியும், சிறுவயதில் நான் எவ்வளவு பெரிய ரஜினி ரசிகனாக இருந்திருக்கிறேன், விபரம் தெரியாமலேயே கமல் சாருக்கு எதிராக இருந்திருக்கிறேன். மேலும், தற்போது ரஜினி மற்றும் கமல் சார் கைகோர்த்துள்ளது எவ்வளவு மகிழ்ச்சி அளித்துள்ளது என்றும் பேசியிருக்கிறேன்.

கமல் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. நான் ஏதும் தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்கலாம், முழு வீடியோவையும் பார்த்தால், நான் அவருக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்பது புரியவரும். சிலர் திட்டமிட்டு எனது பேச்சை திசை திருப்பி வருகின்றனர். என் இதயத்தில் இருந்து கமல்ஹாசனை எப்படி மதிக்கிறேன் என்பது எனக்கு தெரியும். அதனை யாருக்கும் நிரூபிப்பது அவசியமில்லை என்று நினைக்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், லாரன்ஸ் அந்த பேச்சை தவிர்த்திருக்கலாம். என்ன இருந்தாலும் அது தவறுதான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP