வைகோ பிரசாரம் : கலக்கத்தில் கனிமொழி ஆதரவாளர்கள்!

வைகோ தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தூத்துக்குடியில் இருந்து தொடங்குவதாக அறிவித்துள்ளதையடுத்து, திமுக தொண்டர்கள், குறிப்பாக கனிமொழி ஆதரவாளர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 | 

வைகோ பிரசாரம் : கலக்கத்தில் கனிமொழி ஆதரவாளர்கள்!

வைகோ தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தூத்துக்குடியில் இருந்து தொடங்குவதாக அறிவித்துள்ளதையடுத்து, திமுக தொண்டர்கள், குறிப்பாக கனிமொழி ஆதரவாளர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில், திமுகவின் சார்பில் கனிமொழி களம் இறங்குகிறார்.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

இதையடுத்து, சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் இல்லத்துக்கு இன்று சென்ற கனிமொழி, தாம் தேர்தலில் போட்டியிடபோவதையொட்டி வைகோவிடம் வாழ்த்துப் பெற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெறுவார். எனது தேர்தல் பிரசாரத்தை வரும் 22 -ஆம் தேதி, தூத்துக்குடியில் தான் தொடங்க உள்ளேன்" எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கனிமொழி ஆதரவாளர்கள், "வைகோ ஒரு காலத்தில் சிறந்த பார்லிமெண்டோரியனாக இருந்தவர் தான். நல்ல பேச்சாளரும் கூடதான். ஆனால், தேர்தல் களத்தில் இவர் அணி சேரும் கூட்டணி தோல்வியைத் தழுவுவது தொடர்கதையாக உள்ளது. இதற்கு கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மண்ணைக் கவ்வியது சமீபத்திய உதாரணம்.

வைகோவின் தேர்தல் சென்ட்டிமென்ட் இப்படி இருக்க, அவர் கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடியில் தமது தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளாரே...இதனால் அங்கு தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதகமாக இருக்குமா?"  என சற்று அச்சத்துடன் கேள்வியெழுப்பியபடியே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP