முதலமைச்சருக்கு சவால் விடுத்துள்ள ஸ்டாலின்

’அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிட்டு 2 நாட்களில் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பதில் சொல்லியாக வேண்டும்’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 | 

அந்த அறிக்கையில் மேலும், ‘ திமுக ஆட்சியில் 2006-2010 மார்ச் வரை ரூ.40,091 கோடி முதலீடு பெறப்பட்டு 2.21 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. திமுக ஆட்சியில் நாட்டில் வளர்ச்சியின் நட்சத்திரமாக தமிழகம் விளங்கியது. முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் ஒருவாரத்தில் பாராட்டு விழா நடத்த தயாராக இருக்கிறேன். என் சவாலை முதலமைச்சர் ஏற்றுக் கொள்ளத் தயாரா?’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP