குமரியில் களம் காண்கிறார் பிரதமர் மாேடி? 

இதுவரை, தமிழர் ஒவருவர் கூட, நாட்டின் பிரதமர் பதவி வகித்ததில்லை. ஒரு வேளை, குமரியில் மாேடி போட்டியிட்டு அதில் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமர் ஆனால், தமிழக தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், நாட்டின் பிரதமர் ஆகியிருக்கிறார் என்ற பெயர் நமக்கு கிடைக்கும்.
 | 

குமரியில் களம் காண்கிறார் பிரதமர் மாேடி? 

குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர தாமாேதர்தாஸ் மோடி, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், தன் சொந்த மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் மற்றும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். 

களம் இறங்கிய இரண்டு தொகுதிகளிலும், அமோக வெற்றியும் பெற்றார். இதன் மூலம், மோடி, தன் சாெந்த மாநிலத்தில் மட்டுமின்றி, நாட்டின் எந்த பகுதியிலும் களம் கண்டு வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்தார்.

தேர்தல் முடிவகளுக்குப் பின், ஆமதாபாத் எம்.பி., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வாரணாசி எம்.பி.,யாக தொடர்வதாக அறிவித்தார். 2014 லோக்சபா தேர்தலின் போது வீசிய மோடி அலையின் தாக்கம், அதற்கு அடுத்து நடந்த, உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்தது. 

விளைவு, அந்த மாநிலத்தில் 300க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம், நாட்டின் மிகப்பெரிய மாநிலத்தில் ஆட்சியை பிடித்ததுடன், அந்த கட்சிக்கு, ராஜ்யசபா எம்.பி.,க்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 

அதற்குப் பின், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில், பெரும்பாலானவற்றில் பா.ஜ.,வெற்றி பெற்றது. இதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு, வெறும் குஜராத்தோடு நின்றுவிடவில்லை என மீண்டும் நிரூபணம் ஆனது. 

குமரியில் களம் காண்கிறார் பிரதமர் மாேடி? 

இந்நிலையில், மோடிக்கு எதிராக, தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பலை நிலவுவதாக, எதிர்க் கட்சிகள் கூறி வரும் நிலையில், அங்கும் தன் செல்வாக்கை பரிசோதித்து பார்க்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தென்மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனாலும், எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், அந்தக் கட்சிதான் தனிப் பெரும் கட்சியாக திகழ்கிறது. 

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், அந்த கட்சிக்கு ஓரளவு மக்கள் செல்வாக்கு உள்ளது. மீதமிருப்பது கேரளாவும், தமிழகமும் தான். கேரளாவில் மெல்ல, மெல்ல கால் ஊன்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் பா.ஜ., தலைமை, தமிழகத்தில், தற்போது ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளது. 

அதிலும், எடுத்தேன், கவிழ்த்தேன் என இல்லாமல், நிதானமாக யோசித்து, வெற்றி வாய்ப்புடைய, ஐந்து தொகுதிகளை மட்டும் கேட்டு பெற்றுள்ளது. அவற்றில், யார் வேட்பாளர்கள் என்பது கூட இறுதி செய்யப்பட்டு விட்டதாகவே அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

வட மாநிலங்கள் மட்டுமன்றி, தென் மாநிலங்களிலும், வெற்றிக் கனியை பறிக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுச்சேரியை உள்ளடக்கிய, 40 தொகுதிகளின் வெற்றி, தோல்வி, அடுத்ததாக மத்தியில் யார் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் விதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குமரியில் களம் காண்கிறார் பிரதமர் மாேடி? 
எனவே, இம்முறை, தமிழகத்தில் தங்கள் வாக்கு வங்கியை அதிகரிப்பதுடன், தென் மாநிலங்களிலும், மோடியின் செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சியாக, பிரதமர் நரேந்திர மாேடி, இம்முறை, நாட்டின் கடைக்கோடியின் அமைந்துள்ள கன்னியாகுமரியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த தேர்தலின் போது, ஜெயலலிதாவின் தனிப்பட்ட செல்வாக்கையும் மீறி, பா.ஜ., வெற்றி பெற்ற ஒரே தொகுதி கன்னியாகுமரி தான். தி.மு.க., - காங்கிரஸ் - அ.தி.மு.க., என்ற மூன்று கட்சி வேட்பாளர்கள், அதிக அளவிலான கிறிஸ்த்துவ வாக்காளர்கள் என பலமுனைப் போட்டி நிலவிய போதும் கூட, பா.ஜ., சார்பில் போட்டியிட்ட, பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். 

அவர், சுமார், 3.75 லட்சம் வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது. இம்முறை, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வேறு. அந்த கணக்கை வைத்துப் பார்த்தால், 5 லட்சத்திற்கும் அதிகமான வாங்கு வங்கி உடைய ஒர் தொகுதியாக உள்ளது, கன்னியாகுமரி. 

பிரதமரே நேரடியாக களம் இறங்கினால், வி.ஐ.பி., தாெகுதி  என்ற அந்தஸ்தை பெற்றுவிடும். பா.ஜ.,வுக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைக்கும். ஒரு வேளை, கன்னியாகுமரியில் மாேடி வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைந்தால், எதிர் வரும் தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் ஓட்டு வங்கி அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

பிரதமர் அடிக்கடி, தொகுதிக்கு வந்து செல்வார் என்பதால், அந்த லோக்சபா தொகுதியை சுற்றியுள்ள மாவட்டங்கள் வளர்ச்சி பெறும். கேரளாவை ஒட்டி அமைந்துள்ள மாவட்டம் என்பதால், கன்னியாகுமரியில் அடிக்கும் மோடி அலை, சற்று கேரளா பக்கமும் வீச வாய்ப்புள்ளதாக, அந்த கட்சித் தலைமை கருதுகிறது. 

மோடி போட்டியிடுவதாக கசிந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் சமீபத்தைய பேச்சும் அமைந்துள்ளது. சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளித் அவர், ‛‛ கட்சித் தலைமை கன்னியாகுமரி தொகுதியில்  போட்டியிட எனக்கு வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன்’’ என பட்டும்படாமல் கருத்து தெரிவித்துள்ளார். 

 

குமரியில் களம் காண்கிறார் பிரதமர் மாேடி? 
அப்படியென்றால், அவரது தொகுதியில் மாற்று வேட்பாளருக்கான பேச்சு அடிபடுவதாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயம் வாய்ந்த வேட்பாளர், மத்திய அமைச்சராக இருப்பவர், தொகுதியில் நல்ல பெயர் வாங்கியவர் என பல நல்ல விஷயங்கள் இருக்கும் நிலையில், அவர் ஏன் அப்படி பேச வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. 

எது எப்படியோ, வடக்கு, வட கிழக்கு, மேற்கு மாநிலங்களில் முத்திரை பதித்த பா.ஜ., தற்போது மாேடி எனும் சூறாவளியை, தமிழகத்தின் பக்கம் திருப்பிவிட்டு, அதன் மூலம், தென் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளை ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவே தெரிகிறது. 

பா.ஜ., கட்சி தெற்கில் தடம் பதிக்க, குமரியில் களம் காண்பாரா மாேடி, அப்படி போட்டியிட்டால், அது, அந்த கட்சியிலும், தமிழக அரசியலிலும் எவ்வகை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இதுவரை, தமிழர் ஒவருவர் கூட, நாட்டின் பிரதமர் பதவியை வகித்ததில்லை. ஒரு வேளை, குமரியில் மாேடி போட்டியிட்டு அதில் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமர் ஆனால், தமிழக தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், நாட்டின் பிரதமர் ஆகியிருக்கிறார் என்ற பெயர் நமக்கு கிடைக்கும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP