தேர்தல் கூட்டணிகளின் ஆரம்பமே இப்படியா..?

தமிழக அரசியல் கட்சிகளின் புனிதத் தலமாக மதிக்கப்பட்ட இடங்கள் ராமவரம் தோட்டம், போயஸ்தோட்டம், கோபாலபுரம், அண்ணா அறிவாலயம் போன்றவை. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் எடுத்த அனைத்து முடிவுகளும் இங்கே தான் இறுதி செய்யப்பட்டது.
 | 

வாஜ்பாய் ஆட்சியின் போது அதிமுகவை சமாதனப்படுத்த பாஜக தலைவர்கள் போயஸ்கார்டன் வாசலில் நிரந்தரமாக குடியிருந்தனர். தேர்தல் நேரங்களில் மற்ற தலைவர்கள் போயஸ் தோட்டத்தில் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், முடிவு எடப்படும் நிலைக்கு முன்பாக 2ம் கட்டத் தலைவர்கள் கூட போயஸ் கார்டனில் இருந்து தான் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதே போல கருணாநிதி தன் முடிவுகளை கோபாலபுத்தில் அல்லது அண்ணா அறிவாலயத்தில் தான் எடுப்பார். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் இரு இடங்களும் மதிப்பு இழந்து விட்டன. பாரம்பரியத்தை விடாமல் ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகிறார். 

தேர்தல் கூட்டணிகளின் ஆரம்பமே இப்படியா..?

ஆனால், அதிமுக இந்த மரபுகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு முதல்முறையாக ஓட்டலை தேடிப் போய் இருக்கிறார்கள். அதிமுக, பாமக கூட்டணி முடிவான இடம் ஆழ்வார் பேட்டையில் உள்ள கிரவுன் பிளாஸா என்ற ஸ்டார் ஓட்டல்.

கடந்த காலங்களில் வீட்டிற்கு பதிலாக ஓட்டலில் சென்று சாப்பிட்டால் அன்று ரகளை தான். இது போன்ற கலாச்சாரம் கொண்ட தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணியே ஓட்டலில் பேசப்படுகிறது. அதிமுக, பாமக கட்சிகளுக்கு சென்னையில் கட்சி அலுவலங்கள் உள்ளது.

தேர்தல் கூட்டணிகளின் ஆரம்பமே இப்படியா..?

இதைத் தவிர முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் வீடுகள் சென்னையில் உள்ளன. அதிமுகவிற்கு 'ஈகோ' இல்லை என்றால் தைலாபுரம் தோட்டத்தில் சென்று கூட்டணியை முடிவு செய்து இருக்கலாம். 

இதையெல்லாம் விட்டு விட்டு ஓட்டலை தேடி ஓடியிருப்பது, இவர்கள் மத்தியில் திரைமறைவில் நிறைந்து இருக்கும் 'ஈகோ' தான் காரணம். 
இந்த 'ஈகோ' தேர்தல் களத்தில் வெளிப்பட்டால் வெற்றி அறைக்குள்ளேயே முடங்கிவிடும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வது அவசியம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP