தினகரனின் ‛ஸ்லீப்பர் செல்’லா தம்பித்துரை?

பா.ஜ., அரசு மீது அவருக்கு ஏன் கோபம் வருகிறது என புரியவில்லை. ஒரு புறம், தம்பித்துரை பா.ஜ.,வுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன் வைக்கிறார். அதை, அவரின் சொந்தக் கருத்து என, அ.தி.மு.க., கூறுகிறது. கட்சியின் கொள்கை பரப்பு செயலர் கூறும் கருத்துக்கள், எப்படி அவரின் சொந்த கருத்துக்களாக இருக்க முடியும்?
 | 

தினகரனின் ‛ஸ்லீப்பர் செல்’லா தம்பித்துரை?

அ.தி.மு.க.,வின் மூத்த தலைவரும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பித்துரையின் செயல்பாடுகள், அந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கே புரியாத புதிராக உள்ளது. 

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., இடையிலான கூட்டணி இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், பா.ஜ.,வுக்கு எதிராக, கடும் விமர்சனங்களை முன் வைக்கும் தம்பித்துரை, ஒரு வேளை, தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறாரோ  என அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து, தினகரன் துணை பொதுசெயலராக உள்ள, அ.ம.மு.க.,வை சேர்ந்த,மூத்த தலைவர் சி.ஆர்.சரஸ்வதி நம் நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:

‛‛அ.தி.மு.க.,வில் மூத்த தலைவராக விளங்கக் கூடிய தம்பித்துரையின் செயல்பாடுகள், எங்களுக்கும் புரியாத புதிராகத்தான் உள்ளது.  மத்திய பா.ஜ., அரசு நீட் தேர்வை அறிமுகம் செய்த போது, தம்பித்துரைக்கு கோபம் வரவில்லை. 

மாணவி அனிதா மரணம் அடைந்த போது அவருக்கு கோபம் வரவில்லை. தமிழகத்தை பாதிக்கும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டபோது அவர் கோபப்படவில்லை. 

ஆனால், திடீரென தற்போது, பா.ஜ., அரசு மீது அவருக்கு ஏன் கோபம் வருகிறது என புரியவில்லை. ஒரு புறம், தம்பித்துரை பா.ஜ.,வுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன் வைக்கிறார். அதை, அவரின் சொந்தக் கருத்து என, அ.தி.மு.க., கூறுகிறது. 

கட்சியின் கொள்கை பரப்பு செயலர் கூறும் கருத்துக்கள், எப்படி அவரின் சொந்த கருத்துக்களாக இருக்க முடியும்? இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது, அந்த கட்சியினர் நாடகம் நடத்துவதாகவே தெரிகிறது. 

தம்பித்துரை இவ்வளவு விமர்சனங்களை முன் வைத்த பிறகும், அ.தி.மு.க., - பா.ஜ., இடையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்ட பின், அவர் எப்படி நடந்து கொள்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தம்பித்துரை அவர் மனதில் என்ன நினைக்கிறார் என எங்களுக்கு தெரியாது.

தினகரனின் ‛ஸ்லீப்பர் செல்’லா தம்பித்துரை?

எங்களை பொருத்த வரை, எங்கள் துணை பொதுச் செயலரை தலைவராக ஏற்று, அந்தப் பக்கம் உள்ள அனைவரும் வந்து சேரும் காலம் வெகு துாரம் இல்லை.

இரட்டை இலை சின்னத்தை பொருத்த வரை, தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்கள் உருவாக்கிய சின்னம். ஜெயலலிதாவின் வெற்றி சின்னம். அதை மீட்டெடுக்கும் சட்ட போராட்டம் தொடரும். நிச்சயம் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். 

அ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைப்புக்கு நிபந்தனை!

அ.தி.மு.க., எங்கள் தாய் கழகம். அதை மீட்டெடுப்பதே எங்கள் இலக்கு. அ.தி.மு.க.,வும் அ.ம.மு.க.,வும் இணைய வேண்டும் என்றால், எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., தங்கமணி, வேலுமணி, வீரமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட, முக்கிய 10 தலைவர்கள் பதவி விலக வேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால், இரு கட்சி இணைப்பு குறித்து பேசலாம்’’ இவ்வாறு அவர் கூறினார். 

‛நடிப்பில் சிவாஜியை மிஞ்சியவர் ஓ.பி.எஸ்.,’ : சி.ஆர்.சரஸ்வதி தாக்கு

‛எடப்பாடியை எதிர்த்தார் தங்கமணி’ : சொல்கிறார் சி.ஆர்.சரஸ்வதி

சி.ஆர்.சரஸ்வதியின் முழு  பேட்டிக்கான வீடியோவை காண இங்கே ‛கிளிக்’ செய்யவும்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP