எடையைக் குறைத்ததால் ஹிந்திப் வாய்ப்பை இழந்த கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ் நடித்த 'மகாநதி' படம் அவருக்கு தேசிய விருதை தேடி தந்தது மட்டுன்றி அவரின் நடிப்பு இந்திய சினிமா முழுவதும் அவரை பிரபலமாக்கியது.இதன் மூலம் பாலிவுட்டில் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக மைதான் என்கிற ஹிந்திப் படத்தில் நடிக்க இருந்தார். இந்நிலையில் அப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக ப்ரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார்.
 | 

இந்த படம் 1952 முதல் 1962 காலக்கட்டத்திலான இந்திய கால்பந்து விளையாட்டு கதையை மையப்படுத்திய படமாகும். தற்போது கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்துள்ளதால் இந்த கதைக்கு மிகவும் இளமையாக தெரிவார் என்பதாலும் படக்குழு கீர்த்தி சுரேஷை அதிரடியாக நீக்கி  நடிகை ப்ரியாமணி நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.கால்பந்துப் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

இது பற்றி கூறிய ப்ரியாமணி இந்த பட வாய்ப்பு எனக்கு டிசம்பர் மாதம் வந்தது.இயக்குனர் அமித் கூறிய கதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது எனவே என்னால் இந்த வாய்ப்பை மறுக்க முடியவில்லை என கூறினார் 

கீர்த்தி சுரேஷ் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார்.ப்ரியாமணி தெலுங்கு ரீமேக்கான அசுரன் படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP