காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்! அவருக்கு துரைமுருகன் வக்காளத்து!!

வாணியம்பாடி திமுக நகரச் செயலாளர் சாரதி குமார் மீது அவரது மனைவி கள்ளக்காதல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த நபருக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் ஆதரவு தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் புகார் அளித்திருப்பதாக ரம்யா கூறியுள்ளார்.
 | 

காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்! அவருக்கு துரைமுருகன் வக்காளத்து!!

வாணியம்பாடி திமுக நகரச் செயலாளர் சாரதி குமார் மீது அவரது மனைவி கள்ளக்காதல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த நபருக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் ஆதரவு தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


சாரதி குமாருக்கும், சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் சாரதிகுமாருக்கு அவரைவிட 16 வயது அதிகமான பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், இருவரும் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரம்யா புகார் அளித்தார். படுக்கை அறையில் கூட அந்தப்பெண்ணை சாரதிகுமார் பக்கத்தில் படுக்கவைத்துக் கொள்கிறார் என்றும், தட்டிக்கேட்டால் அடித்து துன்புறுத்துவார் எனவும் புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் புகார் அளித்திருப்பதாக ரம்யா கூறியுள்ளார். மேலும் பணம், நகைகளை பறித்துக் கொண்டு தனக்கும, தன் குடும்பத்தினருக்கும் சாரதி குமார் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ரம்யா குற்றம் சாட்டியிருந்தார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்! அவருக்கு துரைமுருகன் வக்காளத்து!!
அதனைத் தொடர்ந்து கட்சிப் பொறுப்பில் இருந்து சாரதி குமார் நீக்கப்படுவதாக திமுக அறிவித்தது. இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன், சாரதி குமாருக்கு ஆதரவாக பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் வாணியம்பாடியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் துரைமுருகனை சந்தித்து சாரதி குமாருக்கு மீண்டும் பொறுப்பு வழங்குமாறு முறையிடுகின்றனர். அதற்கு துரைமுருகன், சாரதி வாணியம்பாடிக்கு வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கிறேன் என்று அவர்களை அனுப்பி வைக்கிறார்.

 

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  மேலும் இந்த வீடியோ திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்! அவருக்கு துரைமுருகன் வக்காளத்து!!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP