கர்நாடகா வாக்கு எண்ணிக்கை.. ஆட்சியை தக்க வைக்குமா பாஜக?

கர்நாடக இடைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக வந்தால் மட்டுமே பாஜக ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலை தற்போது உள்ளது.
 | 

கர்நாடகா வாக்கு எண்ணிக்கை..  ஆட்சியை தக்க வைக்குமா பாஜக?

கர்நாடக இடைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக வந்தால் மட்டுமே பாஜக ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலை தற்போது உள்ளது. 

கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில், மஜத- காங்கிரஸ் கூட்டணி அமைத்து குமாரசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்றது. இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், குமாரசாமி ஆட்சிக்கு தேவையான  பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை கைப்பற்றியது. 

இந்நிலையில், 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த டிச.5 ஆம் தேதி நடைபெற்றநிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க  6 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனிடையே, வாக்கு எண்ணிக்கையில் 6 தொகுதிகளில் பாஜகவும், ஒரு இடத்தில் மஜத கட்சியும் முன்னிலை வகித்து வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP