இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்! எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்! எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
 | 

இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்! எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

தமிழகத்தில், திருநெல்வேலியில் செயல்படும் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு தொழில் பழகுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது  வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்து பணிக்காக காத்திருக்கும் விருப்பம் உள்ளவர்கள் இளைஞர்கள் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். 

மொத்த 41 காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். 

பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.  நூலக அறிவியல் பிரவுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் நூலக அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2019

வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். www.iprc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து நேரடியாக நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி அன்று நேர்முகத் தேர்வில் பங்கேற்கவும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP