ஜெய் ஸ்ரீராம் முழக்கம்? போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு!

ஜெய் ஸ்ரீராம் முழக்கம்? சிஏஏ-க்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு.. பேஸ்புக் நிறுவனம் அதிரடி..
 | 

ஜெய் ஸ்ரீராம் முழக்கம்? போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு!

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. டெல்லியில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் திடீரென போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். 

ஜெய் ஸ்ரீராம் முழக்கம்? போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு!

இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். அதன் பின்னர் துப்பாக்கியால் சுட்ட நபரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அந்த நபர் துப்பாக்சி சூடு நடத்துவதற்கு முன்பாக 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்டதாக வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் சிஏஏ-வுக்கு எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிராகவும் முழக்கமிட்டு போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்தது.

ஜெய் ஸ்ரீராம் முழக்கம்? போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு!

அதன் பின்னர் போலீஸார் அவரை விசாரித்ததில், துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபர், நொய்டாவைச் சேர்ந்த 19 வயதான கோபால் ஷர்மா என்கிற இளைஞர் என்பது தெரியவந்தது. முன்னதாக அந்த நபர் தனது பேஸ்புக்கில் ஒரு வைல் வீடியோ பதிவிட்டிருந்துள்ளார். இதை கவனித்த பேஸ்புக், அவரது கணக்கை முடக்கியதோடு, ‘இது போன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு இங்கு இடம் கிடையாது.

ஜெய் ஸ்ரீராம் முழக்கம்? போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு!அதனால் அவரது கணக்கு முடக்கப்பட்டதோடு அந்த பதிவுகளும் நீக்கப்பட்டுவிட்டன, அவருக்கு ஆதரவான பதிவுகளும் விரைவில் அடையாளம் காணப்பட்டு நீக்கப்படும்’ என்றும் குறிப்பிட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP