டெல்லி வன்முறையாளர்களை காப்பாற்றுகிறதா போலீஸ்?

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை காரணமாக முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளர். 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே டெல்லி வன்முறை தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
 | 

டெல்லி வன்முறையாளர்களை காப்பாற்றுகிறதா போலீஸ்?

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை காரணமாக முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளர். 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இந்நிலையில் இச்சம்பவத்தில் காவல்துறையினர் வன்முறையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனிடையே டெல்லி வன்முறை தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், காவலர் ஒருவர் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி மேகராவை உடைக்கும் காட்சி பதிவாகியுள்ளது.


இதனால் வன்முறையில் ஈடுபடுபவர்களை காப்பாற்ற காவல்துறையினர் முயற்சி செய்கின்றனர் என்ற கருத்து சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகிறது. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP