1. Home
  2. தமிழ்நாடு

இந்தியர்களுக்கு ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு! அமெரிக்கா, ஈரான் போர் பதற்றம்!

இந்தியர்களுக்கு ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு! அமெரிக்கா, ஈரான் போர் பதற்றம்!

ஈரான் மீது அமெரிக்கா நிகழ்த்திய தாக்குதல் மூன்றாம் உலகப் போருக்கு அச்சாரமாக இருந்து விடக் கூடாது என்று உலக நாடுகள் பதற்றத்தில் உள்ளன. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு நிச்சயமாக பதிலடி கொடுப்போம் என்று ஈரானில் குரல்கள் ஒலித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் அஞ்சுகிறார்கள். இந்த போர் பதற்றம் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், ஒரே நாளில் இந்தியர்களுக்கு மூன்று லட்சம் கோடி இழப்பி ஏற்பட்டுள்ளது.

ஈரான் தளபதி சுலைமான் கொல்லப்பட்ட செய்தி வெளியான அடுத்த சில மணி நேரத்திலேயே கச்சா எண்ணெய் விலை ஏறினாலும் பங்குச் சந்தை மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டது. சென்சஸ் 178 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி 233 புள்ளிகள் சரிவை சந்தித்தது. இந்த சரிவின் காரணமாக நேற்று ஒரே நாளில் பங்குச் சந்தையில் முதலீடு செய்த இந்திய முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.

அதே சமயம் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மிகப் பெரிய லாபம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்குமிடையே போர் பதற்றம் மேலும் அதிகரித்தால், இந்திய பங்குச் சந்தை இன்னும் அதள பாதாளத்திற்குச் செல்லும் என்று கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like