1. Home
  2. தமிழ்நாடு

அதிகரிக்கும் பக்தர்கள் மீதான தாக்குதல்.. தீட்சிதர்களுக்கு கட்டுப்பாடு இல்லையா என கேள்வி..?

அதிகரிக்கும் பக்தர்கள் மீதான தாக்குதல்.. தீட்சிதர்களுக்கு கட்டுப்பாடு இல்லையா என கேள்வி..?

சிதம்பரம் நடராஜர் கோவிலில் வழிபாட்டுக்கு வந்த பெண்ணை மீண்டும் ஒரு தீட்சிதர் கொடுரமாக தாக்கியுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசனங்கள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனத்திற்காக காலையிலிருந்து கோவிலில் காத்திருந்தனர்.

இதனையடுத்து தீட்சிதர்கள் மாலை 5:15 மணிக்குதான் தரிசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதனால் பக்தர்கள் பல மணி நேரமாக கோவிலில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. அப்போது திருவாரூரில் இருந்து ராதா லட்சுமி (57) என்ற பெண் தரிசனத்திற்கு வந்திருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் அதில் அவர் சிக்கிக் கொண்டார். செல்போனை கையில் வைத்தபடி கையை மேலே தூக்கி உள்ளார் அந்தபெண்

அப்போது இதை பார்த்த தீட்சிதர்கள் அந்தப்பெண் அங்குள்ள சிலைகளை புகைப்படம் எடுக்கிறார் என எண்ணி ஒரு கனமான கிர்னி பழத்தை தூக்கி அவரது முகத்தில் எறிந்தனர் அந்தக் பழம் அந்த பெண்ணின் முகத்தில் வேகமாக பட்டு அந்த பெண் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். பிறகு பக்கத்தில் இருந்தவர்கள் அந்த பெண்ணை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்து ஆறுதல் அடைய செய்தனர். அந்தப் பெண்ணின் முகத்தில் காயம் ஏற்பட்டு முகம் வீங்கியது இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அந்த பெண் புகார் எதுவும் கொடுக்காமல் அங்கிருந்து சென்றதாக தெரிகிறது.
ஏற்கனவே சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் ஒருவர் முறையாக மந்திரம் சொல்ல வில்லை என்று கேட்டதற்கு பெண்ணை கன்னத்தில் அறைந்த சம்பவம் நடந்து. அதில் அந்த நபர் தலைமறைவாக இருந்து பின்னர் ஜாமீன் பெற்றது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like