அதிகரிக்கும் குற்றங்கள்.. இன்ஸ்டாகிராம் அதிரடி நடவடிக்கை..

அதிகரிக்கும் குற்றங்கள்.. இன்ஸ்டாகிராம் அதிரடி நடவடிக்கை..
 | 

அதிகரிக்கும் குற்றங்கள்.. இன்ஸ்டாகிராம்  அதிரடி நடவடிக்கை..

போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கும் முயற்சிகளை இன்ஸ்டாகிராம் நிறுவனம் தொடங்கியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பகிர்ந்து அது தொடர்பான குற்றங்கள், இளம் பெண்கள் ஆபத்தில் சிக்குவது போன்ற பல்வேறு குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இது போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க இன்ஸ்டாகிராம் நிறுவனம் ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி போலி செய்திகளை கண்டறியும் குழுக்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாக இன்ஸ்டாகிராம் ஏற்கனவே அறிவித்ததை தொடர்ந்து புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்ஸ்டாகிராம் போலி செய்திகளை முழுமையாக மறைத்து, அதன் மீது தவறான தகவல் எனும் குறியீடு வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. ஏன் அது தவறான தகவல் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள “See Why” எனும் அம்சமும்,தவறான தகவல் பற்றி அதிக விவரங்களையும் அறிந்து கொள்ள “See Post” அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP