கூகுள் எடுத்துள்ள முக்கிய பாதுகாப்பு நடவடிக்கை- ஆண்ட்ராய்டு பயனர்கள் எச்சரிக்கை

சுமார் 600 செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரங்களை பணமாக்கும் முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளது.சீனா, இந்தியா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளில் இருந்தே மோசடியில் ஈடுபடும் செயலிகள் உருவாக்கப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
 | 

கூகுள் எடுத்துள்ள முக்கிய பாதுகாப்பு நடவடிக்கை- ஆண்ட்ராய்டு பயனர்கள் எச்சரிக்கை

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மோசடியில் ஈடுபடும் செயலிகளை கண்டறிந்து, அதை எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்பத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போன் பயனர்களின் தகவல்களை பாதுகாக்கவும். தேவையற்ற அணுகலை வழங்கும் செயலிகளை தடை செய்ய கொள்கைவொன்றை உருவாக்கியது.அதை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டில் மோசடியில் ஈடுபடும் மற்றும் தீங்குகளை ஏற்படுத்தும் செயலிகளை தனது பிளே ஸ்டோரில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கியது கூகுள். இதற்கான நடவடிக்கைகள் கடந்தாண்டு முதலே செயல்படுத்தப்பட்டு வந்தன.

                                               கூகுள் எடுத்துள்ள முக்கிய பாதுகாப்பு நடவடிக்கை- ஆண்ட்ராய்டு பயனர்கள் எச்சரிக்கை

இந்நிலையில் நடப்பாண்டு தொடங்கியதில் இருந்து முக்கிய பாதுகாப்பு அம்சங்களில் பெருமளவு முதலீடு செய்யப்போவதாக கூகுள் அறிவித்தது. தற்போது அதற்கான நடவடிக்கைகளில் கூகுள் தீவிரமாக இறங்கியுள்ளது.அந்த வகையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மோசடிகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக கருதப்படும் செயலிகளை எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்பத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

                                              கூகுள் எடுத்துள்ள முக்கிய பாதுகாப்பு நடவடிக்கை- ஆண்ட்ராய்டு பயனர்கள் எச்சரிக்கை

அதன்படி சுமார் 600 செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரங்களை பணமாக்கும் முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளது.சீனா, இந்தியா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளில் இருந்தே மோசடியில் ஈடுபடும் செயலிகள் உருவாக்கப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தீங்கிழைக்கும் செயலிகளை தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்த்துள்ளவர்கள் அவற்றை அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதை தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோரில் அந்த செயலி உள்ளதா என்பதை சரிபார்த்துவிட்டு, மீண்டும் ரீ-இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். ஒருவேளை இல்லை என்றால், அந்த செயலியை விட்டுவிடுவது நல்லது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP