1. Home
  2. தமிழ்நாடு

வணிக ரீதியாக பிஎஸ்என்எல் நம்பரை பயன்படுத்தினால்; இனி அவ்ளோதான்..!

வணிக ரீதியாக பிஎஸ்என்எல் நம்பரை பயன்படுத்தினால்; இனி அவ்ளோதான்..!

அங்கீகரிக்கப்படாத வணிகம் சார்ந்த அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் பயனர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மத்திய அரசாங்கத்தில் கட்டுப்பாடுக்கு கீழ் இயங்கும் தொலைதொடர்பு ஆப்ரேட்டர் நிறுவனமான பி.எஸ்.என்.எல் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மொபைல் அல்லது லேண்ட்லைன் இணைப்பு வழியாக வணிகம் சார்ந்த அழைப்புகள் மற்றும் வணிகம் சார்ந்த எஸ்எம்எஸ்-களை செய்து வருபவர்கள் பிளாக்லிஸ்ட் செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், டி.சி.சி.சி.பி.ஆர் 2018 (TCCCPR 2018) என பெயரிடப்பட்ட டிராயின் வழிகாட்டுதல் படி இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக, நாட்டில் தனியார் தொலைதொடர்பு சேவையை வழங்கி வரும் நிறுவனங்களும் இதே சிக்கல்களை சந்தித்தன. இதை கவனித்த தனியார் நிறுவனங்கள், தங்களுடைய ப்ரைமர் எண் வழியாக வணிக தொடர்புகளை உருவாக்கி வரும் பயனர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தது.அவற்றை தொடர்ந்து தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனமும் இதே நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வமற்ற வகையில் குறிப்பிட்ட எண்ணில் வணிக ரீதியான பயன்பாடு தொடர்ந்தால், அந்த மொபைல் எண்ணை பிளாக் செய்ய பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு உரிமையுள்ளது.

ஒருவேளை நீங்கள் வணிக தேவைக்காக பி.எஸ்.என்.எல் எண்ணை பயன்படுத்தக்கூடியவராக இருந்தால், அதுதொடர்பான தகவல்களை பயனர்கள் டிஎல்டி போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like