அதிகாரப்பூர்வமாக நிரூபித்தால் அதிர்ஷ்டம்.. ரூ.1,00,00,000 பரிசு அறிவித்த பாஜக!!

அதிகாரப்பூர்வமாக நிரூபித்தால் அதிர்ஷ்டம்.. ரூ.1,00,00,000 பரிசு அறிவித்த பாஜக!!
 | 

அதிகாரப்பூர்வமாக நிரூபித்தால் அதிர்ஷ்டம்.. ரூ.1,00,00,000 பரிசு அறிவித்த பாஜக!!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த சமயத்தில் பாஜக சார்பில் ஒரு கோடி ரூபாய் பரிசு என நூதன போஸ்டர் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. குடியுரிமைத் திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நீடித்து வருகிறது. கேரளா, புதுச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த புரிதலை மக்களிடம் ஏற்படுத்த பாஜகவினர் சிஏஏ விளக்க பிரச்சார கூட்டங்களை நாடு முழுவதிலும் நடத்தி வருகின்றனர்.

அதிகாரப்பூர்வமாக நிரூபித்தால் அதிர்ஷ்டம்.. ரூ.1,00,00,000 பரிசு அறிவித்த பாஜக!!

இந்நிலையில், சென்னையில் பாஜகவினர் நூதனமான சுவர் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய குடிமகன்களில் யாராவது பாதிப்படைந்துள்ளார் என்று ஆதாரபூர்வமாக நிரூபித்தால் ரூ.1,00,00,000 கோடி பரிசு வழங்கப்படும் என பாஜக சார்பில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாஜக மாவட்டச் செயலாளர் தங்கவேல் வழக்கறிஞர் பிரிவு என அச்சிடப்பட்டு சென்னையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP