சீமானை விட நான் நல்லா தமிழ் பேசுவேன்... வெளுத்து வாங்கும் லாரன்ஸ்!

நான் தாம் தமிழ் தாயின் மூத்த பிள்ளை என்று சொல்கிறார்கள். நாங்கள் மட்டும் என்ன, அமெரிக்க காரர்களுக்கு பிறந்தவங்களா?
 | 

சீமானை விட நான் நல்லா தமிழ் பேசுவேன்... வெளுத்து வாங்கும் லாரன்ஸ்!

சமீபகாலமாக நடிகர் லாரன்ஸ் மற்றும் சீமானுக்கு இடையே வார்த்தை போர் நடைபெற்று வரும் நிலையில், மீண்டு நடிகர் லாரன்ஸ் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை வெளுத்து வாங்கியுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்த நாள் விழா நேற்று சென்னை காமராஜ் அரங்கில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட நடிகர் லாரன்ஸ், "என் தலைவனுக்கு 70 வயது என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்றும், அவருக்கு இன்னும் 25 வயது மாதிரி தான் இருப்பதாகவும் கூறினார். மேலும், வெறிதனம் என்பது அவருக்கு மட்டுமே பொருந்தும் என புகழ்ந்தார். 

சீமானை விட நான் நல்லா தமிழ் பேசுவேன்... வெளுத்து வாங்கும் லாரன்ஸ்!

தொடர்ந்து பேசிய அவர், நான் கமல் சார் போஸ்டரில் அறியாத வயதில் சாணி அடித்தேன். அது அறியாத வயது. அப்படி பேசியது யார் மனதையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள். கமல் சாரும் ரஜினி சாரும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும். அரசியலில் நல்ல அரசியல் கெட்ட அரசியல் என்று இருக்கிறது. எல்லோரையும் வரவேற்பது தான் நல்ல அரசியல். அரசியலில் நான் மட்டும் வர வேண்டும் என்பது அரசியல் கிடையாது.  

சீமானை விட நான் நல்லா தமிழ் பேசுவேன்... வெளுத்து வாங்கும் லாரன்ஸ்!

நாம் தான் தமிழ் தாயின் மூத்த பிள்ளை என்று சொல்கிறார்கள். நாங்கள் மட்டும் என்ன, அமெரிக்ககாரர்களுக்கு பிறந்தவங்களா? நாங்களும் தமிழ் தாயின் பிள்ளைகள் தான். உங்களை விட நான் நல்லாவே பேசுவேன். ராயபுரத்தில் பிறந்தவன் தான் நான். எப்படி வேண்டுமானாலும் எனக்கு பேச தெரியும். ஆனா நான் அப்படி பேச மாட்டேன். ஏன்னா நான் ரஜினி ரசிகன். நீ ஓட்டுக்காக பண்றவன். நாங்க நாட்டுக்காக பண்றவங்க'  என கூறினார். 

இந்த விழாவில் எழுத்தாளர் கலைஞானம், இயக்குநர்கள் எஸ்.பி முத்துராமன், பி.வாசு, கே.எஸ் ரவிக்குமார், நடிகை மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP