ஐதராபாத் கொலை வழக்கு: குற்றவாளிகளை அடையாளம் காட்டிய விந்தணுக்கள்..

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 | 

ஐதராபாத் கொலை வழக்கு: குற்றவாளிகளை அடையாளம் காட்டிய விந்தணுக்கள்..

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், பிரியங்கா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா ஆகிய நால்வரும் கடந்த 6ஆம் தேதி அதிகாலை விசாரணைக்கு அழைத்து சென்ற போது, தப்பியோட முயன்றதால் சுட்டுக்கொன்றதாக சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். 

அதேசமயம் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தாமல் காவல்துறை என்கவுண்டரில் சுட்டு கொன்றது வன்முறை என்று ஒருதரப்பினர் வாதிட்டு வருகின்றனர். இதனிடையே சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்து அதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பிரேத பரிசோதனை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

ஐதராபாத் கொலை வழக்கு: குற்றவாளிகளை அடையாளம் காட்டிய விந்தணுக்கள்..

இதனிடையே, நான்கு பேர் தான் குற்றவாளிகள் என்பதை டிஎன்ஏ சோதனை மூலம் நிரூபிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பெண் கால்நடை மருத்துவரின் டி.என்.ஏ அறிக்கை வியாழக்கிழமை வந்துள்ளது. அறிக்கையில் எரிந்த சடலம் ஒரு பெண்ணுடையது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, மேலும் அவரது குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏவும் அதனுடன் பொருந்தியுள்ளது. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட விந்தணுக்கள் நான்கு குற்றவாளிகளுக்குச் சொந்தமானது என்பதும் டிஎன்ஏ விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பெண் மருத்துவரின் எலும்புகள் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. கூடுதலாக, பாதிக்கப்பட்டவரின் ஆடைகளிலிருந்து விதை மாதிரிகள் எடுக்கப்பட்டன' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP