ஆத்திரத்தில் அறைந்த கணவர்.. மனமுடைந்து தற்கொலை செய்த மனைவி...

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனந்தூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் கணேஷ் பாபு (28). இவர் வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சமீபத்தில் தொட்டிமேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற பெண்ணுடன் கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
 | 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. வழக்கம்போது, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, ஆத்திரமடைந்த கணேஷ், சூர்யாவை அடித்துள்ளார். இதனால் மனமுடைந்து அழுதுகொண்டிருந்த சூர்யா திடீரென எழுந்து அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட கணேஷ் பாபு, சூர்யாவின் பெற்றோருக்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார்.

தகவல் கேட்டு அங்கு விரைந்த சூர்யாவின் பெற்றோர்கள் தூக்கில் தொங்கிய  மகளை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சூர்யா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டதும் சூர்யாவின் குடும்பத்தார்கள் கதறி அழுதுள்ளனர்.

பின்னர் சூர்யாவின் பெற்றோர் கணேஷ் பாபு மீது போலீசில் புகார் அளித்தனர்.  புகாரின் பேரில் கணேஷ் பாபு மற்றும் அவரது தாய் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP