ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..

ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..
 | 

ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..

தேனி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், டிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடுவதால், அவரை ஊரைவிட்டு வெளியேற்ற கோரி அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் நாகலபுரத்தை சேர்ந்த சுகந்தி துணை நடிகையாக உள்ளார். இவரது கணவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில், சுகந்தியும், அவரது சகோதரியும் இணைந்து டிக்டாக்கில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..ஆண்களுடன் சேர்ந்து  டிக் டாக்கில் வீடியோ வெளியிடுவதால், கடுமையான விமர்சனத்திற்கு சுகந்தி ஆளாகி வருகிறார். இந்நிலையில், நெட்டிசன் ஒருவர் சுகந்தி குறித்தும், நாகலபுரத்து பெண்கள் குறித்தும் தகாத வார்த்தைகளால் பேசி வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகலாபுரம் கிராம பெண்கள், பி.சி.பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சுகந்தியை ஊரை விட்டு வெளியேற்ற வலியுறுத்தினர்.  

ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..டிக் டாக்கில் சுகந்தியின் செயல்பாடுகளால் கிராமத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். சுகந்தி மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP