கூகுள் பே சேவையில் மர்ம ஆசாமிகளை உள்நுழையவிடாமல் தடுக்கலாம்- எப்படி..?

தங்களுடைய மொபைல் போனில் இருக்கும் கூகுள் பே செயலியை திறந்துவிட்டு இதுவரை நீங்கள் செய்த பணப்பரிவர்த்தனைகளை காண்பதற்கு ஸிலைடு அப் செய்ய வேண்டும். அதே இடத்தில் பணம் கோரிய நபரின் தொடர்பு விவரங்களும் இடம்பெற்றிருக்கும். அதில் உங்களுக்கு தொல்லை தரக்கூடிய நபரின் எண்ணை கிளிக் செய்து பிளாக் செய்துவிடலாம்.
 | 

கூகுள் பே சேவையில் மர்ம ஆசாமிகளை உள்நுழையவிடாமல் தடுக்கலாம்- எப்படி..?

ரொக்கமில்லா பரிவர்த்தனையிலுள்ள குறிப்பிட்ட ஆபத்துக்களை தடுக்கும் வகையில் கூகுள் பே செயலியில் ஒரு முக்கிய அம்சம் உள்ளது. அதுதொடர்பான விவரங்களை பார்க்கலாம்.

மஹாராஷ்டிராவில் தானே பகுதியில் வசிக்கும் ஒருவர் கடந்தாண்டு டிஜிட்டல் வாலெட் சேவை மூலம் ஒரு லட்சம் வரை பணத்தை இழந்தார். இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை தன்னுடைய சமூகவலைதளத்தில் அந்த நபர் பதிவு செய்திருந்தார்.

அதில், இணையம் வாயிலாக அந்த நபரை தொடர்பு கொண்ட ஒருவர், பேடிஎம் அல்லது கூகுள் பே வாயிலாக பணம் செலுத்தச் சொல்லி கேட்டிருக்கிறார். மேலும் அந்த நபரிடம் ஓடிபியை தெரிவிக்குமாறு மர்ம ஆசாமி கேட்டுள்ளர். பணம் கிடைக்கப்போகும் ஆவலில் அவரும் கொடுத்தார். இதனால் தனது வங்கி கணக்கில் இருந்து இரண்டு முறை மொத்தமாக ரூ. 1 லட்சத்தை இழந்துள்ளார் பணத்தை பறிகொடுத்தவர்.

                                                        கூகுள் பே சேவையில் மர்ம ஆசாமிகளை உள்நுழையவிடாமல் தடுக்கலாம்- எப்படி..?

இப்படிப்பட்ட இணைய முறைகேட்டில் இருந்து சிக்காமல் இருக்கும் பொருட்டு, சில சேவைகளை வழங்குகிறது கூகுள் பே. இதன்மூலம் உங்களை தொடர்பு கொண்டு பணம் கேட்பவர்களில் குறிப்பிட்ட நபர்களை நீங்கள் பிளாக் செய்ய முடியும். இந்த சிறப்பம்சத்தை ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் இயங்குதளங்களில் பெற முடியும்.

அதற்கான சில எளிய வழிமுறைகள் உள்ளன:

அதன்படி, தங்களுடைய மொபைல் போனில் இருக்கும் கூகுள் பே செயலியை திறந்துவிட்டு இதுவரை நீங்கள் செய்த பணப்பரிவர்த்தனைகளை காண்பதற்கு ஸிலைடு அப் செய்ய வேண்டும். அதே இடத்தில் பணம் கோரிய நபரின் தொடர்பு விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

அதில் உங்களுக்கு தொல்லை தரக்கூடிய நபரின் எண்ணை கிளிக் செய்து பிளாக் செய்துவிடலாம். கான்டேக்ட் லிஸ்டில்  சேவ் செய்யப்பட்ட அல்லது சேவ் செய்யப்படாத என இரண்டு எண்களுக்கும் இதே வழிமுறை தான். கூகுள் பே செயலியில் ஒருமுறை பிளாக் செய்யப்பட்ட நபர், கூகுள் நிறுவனத்தின் மற்ற சேவைகளான போட்டோஸ் மற்றும் ஹேங்க் அவுட்ஸ் போன்ற செயலிகளிலும் பிளாக் செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP