கூட்டணியில் எவ்வளவு தொகுதிகள்? ஸ்டாலின்- வைகோ தீவிர பேச்சுவார்த்தை!

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து திமுக- மதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலினுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
 | 

கூட்டணியில் எவ்வளவு தொகுதிகள்? ஸ்டாலின்- வைகோ தீவிர பேச்சுவார்த்தை!

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து திமுக- மதிமுக இடையே கூட்டணி 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலினுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

திமுகவுடன் மற்ற கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப்பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில், மதிமுக தொகுதிப்பங்கீடு மட்டும் இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. 

தொடர்ந்து இன்று 3ம்  கட்டமாக திமுக- மதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

இதில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களை தொகுதி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP