எகிப்து வெங்காயத்தின் சுவைக்கு போட்டிப் போடும் ஹோட்டல்கள்! அதிர்ச்சியில் பதுக்கல் வியாபாரிகள்!

இந்தியாவிற்கு கப்பல் மூலமாக பலஆயிரம் டன்கள் எகிப்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் பதுக்கல் வியாபாரிகள் வெங்காயத்தின் விலையை குறைக்க தொடங்கி இருக்கின்றனர்.
 | 

எகிப்து வெங்காயத்தின் சுவைக்கு போட்டிப் போடும் ஹோட்டல்கள்! அதிர்ச்சியில் பதுக்கல் வியாபாரிகள்!

இந்தியாவிற்கு கப்பல் மூலமாக பலஆயிரம் டன்கள் எகிப்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் பதுக்கல் வியாபாரிகள் வெங்காயத்தின் விலையை குறைக்க தொடங்கி இருக்கின்றனர். 

மகாராஷ்ட்ரா மற்றும் மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு அபரிமிதமான வெங்காய விளைச்சலால் போதிய விலையின்றி வெங்காயத்தை சாலையில் கொட்டி அழிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் வெங்காயம் பயிரிடுவதை கைவிட்டனர். அதோடு, கனமழை காரணமாக வெங்காய பயிர்கள் அழிந்தன. 

இதனால் ஓரளவு உயர்ந்த வெங்காய விலை, பதுக்கல்காரர்களின் குடோனில் இருப்பு வைக்கப்பட்டதால் பல மடங்கு விலை உயர்ந்தது. மக்களிடையே செயற்கையான வெங்காய தட்டுப்பாட்டை உருவாக்கி வெங்காய விலையை உயர்த்தி பகல் கொள்ளையில் ஈடுபட்டனர். வெங்காய பதுக்கலில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்தும் பதுக்கல்காரர்கள் கண்டுகொள்ளவில்லை. 

எகிப்து வெங்காயத்தின் சுவைக்கு போட்டிப் போடும் ஹோட்டல்கள்! அதிர்ச்சியில் பதுக்கல் வியாபாரிகள்!

ஆனால், வெங்காய விலை உயர்வால் மக்கள் பாதிப்பதை தடுப்பதற்காக வெங்காய உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா, 7வது இடத்தில் உள்ள எகிப்து நாட்டில் பல ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில் நேற்று முன்தினம், எகிப்தில் இருந்து மும்பை துறைமுகத்திற்கு 40 ஆயிரம் டன் வெங்காயம் வந்திறங்கியது.  இந்த வெங்காயத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லாவிட்டாலும், ஹோட்டல்கள், விழாக்களுக்கு இந்த வெங்காயத்தை வாங்கி செல்ல அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். 

இதனால், பதுக்கல் வியாபாரிகள் அவசர அவசரமாக தங்கள் குடோன்களில் இருந்து வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஒரே நாளில் வெங்காயத்தின் விலை 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை குறைந்தது. எகிப்து வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இந்த உருண்டை வெங்காயம் வறண்ட நிலத்தை கொத்தி, பழுது பார்த்து, தண்ணீர் தெளித்து, சொட்டு நீர் பாசனம் முறையில் எகிப்தில் பயிரிடப்படுகிறது. இந்த சிகப்பு வெங்காயம். விதையூன்றி, அது பயிரானதும், வெங்காய நாற்றை பிடுங்கி சம இடைவெளிவிட்டு நடுகின்றனர். தண்ணீர் சத்துள்ள வெங்காயம் குறைந்த அளவு தண்ணீரில் பெரிய உருவம் கொண்டதாக விளைகின்றது.

எகிப்து வெங்காயத்தின் சுவைக்கு போட்டிப் போடும் ஹோட்டல்கள்! அதிர்ச்சியில் பதுக்கல் வியாபாரிகள்!

இத்தகைய வெங்காயங்கள் பெரிய அளவில் இருப்பதால் சுவையிலோ, தரத்திலோ நம்ம ஊர் வெங்காயம் போல இருக்காது என்று வழக்கம் போல சில வியாபாரிகள் அவர்களின் வியாபாரித்திற்காக கதை அளந்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்த வெங்காயங்கள் சுவையும், சத்தும் மிக்கது என்று சுட்டிக்காட்டுகின்றனர் ஊட்டச்சத்து நிபுனர்கள். இந்த வெங்காயத்தின் சுவையை உணர்ந்த ஹோட்டல்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். மேலும், பெரிய அளவில் இருப்பதால் தோலை உரிக்கும் வேலையும் மிச்சம் என கூறுகின்றனர். 

விரைவில், பொதுமக்களும் இதன் சுவையை உணர்ந்து அதிகளவில் வாங்கி செல்ல கூடும் என்பதால், வெங்காயத்தை பதுக்கி வைத்திருக்கும் பதுக்கல்காரர்கள் அவற்றை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால், விரைவில் வெங்காள விலை சகஜமான நிலைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP