சிறார் ஆபாச படம் பார்த்த ஓட்டல் தொழிலாளி கைது.. கண்காணித்து தூக்கிய சைபர் கிரைம் போலீசார்

சிறார் ஆபாச படம் பார்த்த ஓட்டல் தொழிலாளி கைது.. கண்காணித்து தூக்கிய சைபர் கிரைம் போலீசார்
 | 

சிறார் ஆபாச படம் பார்த்த ஓட்டல் தொழிலாளி கைது.. கண்காணித்து தூக்கிய சைபர் கிரைம் போலீசார்

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இணையத்தில் குவிந்து கிடக்கும் ஆபாச படங்கள் தான் இதற்கு காரணம் என கருதுகின்றனர். எனவே சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்வது, பதிவிறக்கம் செய்வது குற்றம் என தெரிவித்து இதில் ஈடுபடுவோரை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். அந்தவகையில், நாமக்கல் அருகே சிறார் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த ஓட்டல் தொழிலாளியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். 

சிறார் ஆபாச படம் பார்த்த ஓட்டல் தொழிலாளி கைது.. கண்காணித்து தூக்கிய சைபர் கிரைம் போலீசார்

பரமத்திவேலூர் அடுத்துள்ள சோழசிராமணி, மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்த குருசாமி (35), சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில், சென்னையில் உள்ள சமூக ஊடகவியல் பிரிவு போலீசார், குருசாமி செல்போன் மூலம் போலி ஃபேஸ்புக் பக்கத்தில் சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து வருவதாக நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சிறார் ஆபாச படம் பார்த்த ஓட்டல் தொழிலாளி கைது.. கண்காணித்து தூக்கிய சைபர் கிரைம் போலீசார்

இதனையடுத்து குருசாமியை தொடர்ந்து கண்காணித்த நாமக்கல் சைபர் கிரைம் போலீசார், அவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP