திருமணமான மூணு மாசத்துல அம்மா வீடு!! விரக்தியில் கணவர் தற்கொலை!!

பிரிந்து சென்ற மனைவி... சோகத்தில் புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு!
 | 

திருமணமான மூணு மாசத்துல அம்மா வீடு!! விரக்தியில் கணவர் தற்கொலை!!

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையால் மனைவி கோபித்துக் கொண்டு பிறந்த வீடு செல்ல,  அந்த சோகத்தில் புது மாப்பிள்ளை தூக்கு போட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்(45). இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சந்தோஷமாக சென்ற அவர்கள் வாழ்க்கையில் 3 மாதத்திலேயே சிறிது தகராறு ஏற்பட்டது.

திருமணமான மூணு மாசத்துல அம்மா வீடு!! விரக்தியில் கணவர் தற்கொலை!!இதனால் கோபித்துக் கொண்டு அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டதால்  சிவக்குமார் மனஉளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று வீட்டில் சிவகுமார் இருந்த அறை உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவரது தந்தை அக்கம், பக்கத்தினரின் உதவியோடு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார்.  அப்போது சிவகுமார் அங்கு தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தார்.

திருமணமான மூணு மாசத்துல அம்மா வீடு!! விரக்தியில் கணவர் தற்கொலை!!

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஈரோடு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினர். மனைவி பிரிந்து சென்றதால் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP