1. Home
  2. தமிழ்நாடு

பொங்கல் வைக்க நல்ல நேரம் இதோ...

பொங்கல் வைக்க நல்ல நேரம் இதோ...

நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது பொங்கல் திருநாள். தைத்திருநாளில் மிக முக்கியமானது பொங்கல் வைப்பது. பொங்கல் திருநாளான (15.01.20) காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரையிலான நேரம், பொங்கல் வைக்க உகந்த நேரமாகும். இந்த நல்ல நேரத்தில் பொங்கல் வைத்திட நமது வாழ்க்கையில் மங்கலம் பொங்கிடும்.அதிகாலை வைக்க நினைப்போர் காலை 7.30க்குள் வைத்து முடித்துவிட வேண்டும்.

பொங்கல் தினத்தன்று வீட்டு முற்றத்தில் குத்து விளக்கேற்றி, அதன் முன் ஒரு வாழை இலையைப் போட வேண்டும். வாய்ப்புள்ளவர்கள் , வாழை இலையின் இடது ஓரத்தில் பச்சை நெல் வைக்கலாம்.நகரங்களில் வசிப்பவர்கள் பச்சை நெல்லை வைக்க முடியாவிட்டாலும் , வாழையிலையில் பச்சரிசியை பரப்பி, கத்தரிக்காய், கருணைக் கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி, வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு ஆகியவற்றையும் படையலாக வைக்க வேண்டும். கரும்பை, கரும்பு தோகையை வெட்டாமல் நீள கரும்பாக சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைப்பது நல்லது.

பொங்கல் பானையை மண் அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். குத்து விளக்கிற்கு ஊதுபத்தி, கற்பூர ஆரத்தி காட்டிய பிறகு, குல தெய்வம் இருக்கும் கோவிலின் திசையை நோக்கி அதைக் காட்ட வேண்டும். பின்னர் சூரிய பகவானுக்கு ஆரத்தி காட்டி, ஒரு தேங்காயை உடைத்து, அதன் நீரை பொங்கல் வைக்க திட்டமிட்டுள்ள புதுப்பானையில் விடலாம்.

படையல் போட்டுள்ள வாழை இலையின் முன்பு பொங்கல் இட்ட புதுப் பானையை இறக்கி வைத்து, பொங்கலோ பொங்கலோ என வாய் நிறைய சொல்லி சூரியனுக்கு பூஜை செய்ய பொங்கல் பண்டிகை நிறைவு பெறும். தொடர்ந்து, காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும். அதன் பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். இந்த பொங்கல் திருநாள் அனைவரின் இல்லங்களிலும் சகல சம்பத்துக்களையும் அள்ளி வரட்டும்.

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்...

newstm.in

Trending News

Latest News

You May Like