மார்ச் முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30.. மூலிகை ராமர் பிள்ளை அதிரடி!!

மார்ச் முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30!! - மூலிகை ராமர் பிள்ளை அதிரடி
 | 

மார்ச் முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30.. மூலிகை ராமர் பிள்ளை அதிரடி!!

மார்ச் இறுதிக்குள் ரூ. 30 விலையில் தமிழகம் முழுவதும் மூலிகை பெட்ரோல் கிடைக்கும் என, மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மம்சாபுரத்தை சேர்ந்தவர் ராமர் பிள்ளை. உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை, மத்திய அரசின் கூட்டு திட்டத்தில் தன்னுடைய மூலிகை பெட்ரோலை பதிவு செய்த அவர், ஜன. 29 முதல் சென்னையில் விற்பனையை தொடங்கியுள்ளார். தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட விற்பனை முகவர்கள் அறிமுக விழா ராஜபாளையத்தில் நடந்தது.

மார்ச் முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30.. மூலிகை ராமர் பிள்ளை அதிரடி!!

அப்போது பேசிய அவர், பிப். 27 முதல் மூலிகை பெட்ரோல் நேரடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் ரூ. 30 என அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. கன்னியாகுமரி - நாகர்கோவில் இடைப்பட்ட பகுதியில் நாளொன்றுக்கு 15,000 லிட்டர் மூலிகைப் பெட்ரோல் தயாரிக்கும் வகையில் தொழிற்சாலை தயாராக உள்ளது. கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மாற்று எரிபொருளை தயாரிக்க எந்தவிதமான தடையும் விதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை தற்போது செயல்படுத்தி வருகிறோம் என்றார்.

மார்ச் முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30.. மூலிகை ராமர் பிள்ளை அதிரடி!!

மேலும் மார்ச் இறுதிக்குள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிரடியாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 21 ஆண்டுகளாக இந்த முயற்சியில் போராடி வருகிறேன். 500 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கும் அளவு மூலப் பொருட்களை இருப்பு வைத்துள்ளேன். நேரடியாக விற்பனை செய்யும் நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.20, டீசல் ரூ.24க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ராமர் பிள்ளை கூறினார்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP