பள்ளியில் பாடம் நடத்தாமல் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்..

பள்ளியில் பாடம் நடத்தாமல் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்..
 | 

பள்ளியில் பாடம் நடத்தாமல் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்..

திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அப்பள்ளியில் படிக்கும் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு தலைமை ஆசிரியர் முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இதனைப் பற்றி அந்த சிறுமி பெற்றோர்களிடம் தெரிவிக்க, அச்சிறுமியின் பெற்றோர் இடையகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பள்ளியில் பாடம் நடத்தாமல் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்..அதன்படி,  காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது உண்மை என தெரியவந்தது. மேலும் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து தொப்பம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலர் ராஜாமணியிடம் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்படி மாணவியிடமும், அவரது பெற்றோரிடமும் மாவட்ட கல்வி அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். அவர்  மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறினர். இதனிடையே, இடையகோட்டை காவல் துறையினர் தலைமை ஆசிரியர் முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP