ஆர்யாவின் மனைவி சாயிஷா சொன்ன சந்தோஷமான செய்தி!

தமிழ்த் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்யா, 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
 | 

ஆர்யாவின் மனைவி சாயிஷா சொன்ன சந்தோஷமான செய்தி!

தமிழ்த் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்யா, 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

திரை உலகின் நட்சத்திர ஜோடிகளான ஆர்யா மற்றும் சாயிஷா ஆகிய இருவரும் மார்ச் 10, 2019 திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இந்த நட்சத்திர ஜோடி 'டெடி' என்ற படத்தில் முதன்முதலாக ஜோடியாக நடித்து வருகின்றனர்.  ஏற்கனவே சூர்யாவின் காப்பான் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் அந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கவில்லை. முதன்முறையாக 'டெடி' படத்தில்தான் ஆர்யா-சாயிஷா ஜோடியாக நடிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் படப்பிடிப்பு முடியும் நாளை படக்குழுவினர் கொண்டாடிய புகைப்படங்களை படக்குழுவினர் தங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

ஆர்யாவின் மனைவி சாயிஷா சொன்ன சந்தோஷமான செய்தி!

அது மட்டுமின்றி, ஆர்யா மற்றும் சாயிஷா ஆகிய இருவரும் தங்கள் சமூக வலைதளங்களில் தாங்கள் முதல் முதலாக ஜோடியாக நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும் விரைவில் இந்த படத்தை திரையில் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் இந்த சந்தோஷமான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP