ரஜினிக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 | 

ரஜினிக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திரையுலம்  மட்டுமின்றி, தமிழகமே ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. ஆங்காங்கே ரசிகர்கள் மின் விளக்குகள் போட்டு மேடை அமைத்து, ஒலிபெருக்கிகளில் ரஜினிகாந்த்தின் சூப்பர் ஹிட் பாடல்களை போட்டு ஆட்டம், பாட்டம்  என கொண்டாடி வருகின்றனர்.

ரஜினிக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து!

தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ரஜினிகாந்தின் வாழ்க்கை சிறப்பாக அமைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

ரஜினிக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து!

இவரது பிறந்தநாளையொட்டி, பல பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவில் மற்றொரு அசைக்க முடியாத இடத்தை வகித்து வரும் உலக நாயகன் கமல்ஹாசன் தனது நண்பரான ரஜினிகாந்திற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நண்பர் ரஜினிகாந்த்துக்கு நல்ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துவதாக பதிவிட்டுள்ளார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP