குற்றவாளிகளுக்கு பிப்1ந் தேதி தூக்கு! இனிப்பு கொடுத்து மாணவிகள் கொண்டாட்டம்!

குற்றவாளிகளுக்கு பிப்1ந் தேதி தூக்கு! இனிப்பு கொடுத்து மாணவிகள் கொண்டாட்டம்!
 | 

குற்றவாளிகளுக்கு பிப்1ந் தேதி தூக்கு! இனிப்பு கொடுத்து மாணவிகள் கொண்டாட்டம்!

டெல்லியில்,  பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு கொலைச் செய்யப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு ஜனவரி 22ம் தேதி தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. பின்னர் தங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குற்றவாளிகள் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்த நிலையில், இவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்கிற அச்சம் ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது அதிருப்தியைத் தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், குற்றவாளிகள் அனுப்பிய கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்தார். குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை உறுதியானது.

இந்நிலையில், ஜனவரி 22ம் தேதி தூக்கிலிடப்படுவதாக இருந்த தேதி, தற்போது மாற்றிவைக்கப்பட்டு, புதிதாக டெல்லி நீதிமன்றம், பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு பிப்1ந் தேதி தூக்கு! இனிப்பு கொடுத்து மாணவிகள் கொண்டாட்டம்!

இது குறித்து தங்களது மகிழ்ச்சியை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். தலைநகர் டெல்லியில் இந்த தீர்ப்பு மாணவிகளிடையே எதிரொலித்தது. கல்லூரி மாணவிகள் இனிப்பு கொடுத்து, இந்த தீர்ப்பை வரவேற்று மகிழ்ந்து வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP