1. Home
  2. தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னைக்கு லேப் டாப் வழங்கப்படும்! கல்வித்துறை உத்தரவு!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னைக்கு லேப் டாப் வழங்கப்படும்! கல்வித்துறை உத்தரவு!

2017-2018, 2018-19 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு இன்றுக்குள் மடிக்கணினி வழங்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவசமாக மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின்
கணினி குறித்த அறிவுத்திறன் மேம்படுவ்துடன், பாடம் தொடர்பான சந்தேகங்களை மாணவர்கள் எளிதாக தெரிந்துகொள்ள வசதியாக உள்ளது.

இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-2018, 2018-19 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு இன்றுக்குள் மடிக்கணினி வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளி முடிந்து கல்லூரி சென்றுள்ள மாணவ, மாணவியருக்கு கல்லூரி நிர்வாகத்தில் இருந்து Bonafied certificate வாங்கி வரும் பட்சத்தில் அவர்களுக்கு மடிக்கணினி அளிக்க அறிவுறுத்தியுள்ளது. மேலும், மடிக்கணினிகள் வழங்கியது போக, கூடுதலாக தேவைப்படின் அதன் விவரத்தை டிச.17ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பிளஸ்2 தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கும், உயர்கல்வி பயிலாத மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like