தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை! சீமான் கோரிக்கை!!

குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் மற்றும் பாலை என ஐவகை நிலங்களிலும் எம் முப்பாட்டன் முருகன் இருக்கிறார். உலகெங்கிலும் பரவியிருக்கும் கோடிக்கணக்கான தமிழர்களின் வழிபாட்டுக் கடவுள் முருகன் தான்.இத்தனை சிறப்பு வாய்ந்த முருகன் வழிபாட்டை ஊக்குவிக்கும் விதமாக தைப்பூசத் திருவிழாவிற்கு தமிழக அரசு விடுமுறை அளிக்காதது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
 | 

தைப்பூசத் திருநாளில் அரசு விடுமுறை அளிக்கவும், தேனும் ,தினைமாவும் கலந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என சீமான் அறைகூவல் விடுத்துள்ளார்.தமிழகத்தில் மட்டுமல்ல  சிங்கப்பூர், மலேசியா, ஈழம், கனடா, லண்டன், சுவிஸ், பிரான்ஸ், மொருசியசு  என உலக நாடுகள் அனைத்திலும் கோவில் கொண்டுள்ள தமிழ்க்கடவுளை கொண்டாட தமிழர்களே ஒன்று சேருங்கள்.
சிங்கப்பூர், மலேசியாவில் தைப்பூசத் திருநாளைக் கொண்டாட அந்நாடு அரசு விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலப் புத்தாண்டு , தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீரர் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, ஓணம் எனத் தமிழர்களுக்கு தொடர்பில்லாத எத்தனையோ பண்டிகைகளுக்கு விடுமுறை அறிவித்த  தமிழக அரசு இதுவரை முருகன்  விழாவிற்கு ஏன் விடுமுறை அளிக்கக் கூடாது? என்று வீரத்தமிழர் கட்சித் தலைவர் அறிவித்து இருக்கிறார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP