தனியார் பள்ளிகளுக்கு ரூ.644 கோடி அரசு நிதி! ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு!!

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையை தமிழக அரசு ஊக்குவிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 | 

இது தொடர்பாக அந்தக் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: பிப்ரவரி 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது . இந்த ஆண்டு  நிதிநிலை அறிக்கையில் சென்ற ஆண்டை விட கல்வித் துறைக்கு நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டதற்கு ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு அதிகரித்துள்ளது.

                                      தனியார் பள்ளிகளுக்கு ரூ.644 கோடி அரசு நிதி! ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு!!

ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்கள்  சேர்க்கப்பட வேண்டும் என்றும் அரசின் கோரிக்கையை ஏற்கும் பள்ளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தனியார் பள்ளிகளின் ஏழை மாணவர் சேர்க்கைக்காக  ரூ. 644 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிதி ஒதுக்கீட்டால் தனியார் பள்ளிகள் தான் வளம் பெறும் எனவும், அந்த நிதியைக் கொண்டு இன்னும் சிலப் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தலாம். அப்போது தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று
மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டாலே அனைத்து தரப்பு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பார்கள் என்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP