பள்ளி ஷூவுக்குள் நல்ல பாம்பு! அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த மாணவி!

தேனி அருகே உள்ள கோடாங்கி பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சுரேஷ். இவருடைய 9 வயது மகள் அவந்திகா அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் எப்பொழும் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வெளியே ஷூவை கழற்றி போட்டுவிட்டு வருவது வழக்கம்.
 | 

இந்நிலையில், இன்று காலை பள்ளிக்கு கிளம்பிய சிறுமி அவசர அவசரமாக ஷூவை போட முயன்றுள்ளார். அப்போது ஷூவில் இருந்து புஸ்ஸ்.. புஸ்ஸ்.. என சத்தம் வந்துள்ளது. இதனால் ஷூவுக்குள் என்ன இருக்கிறது என பார்க்கமுயன்றுள்ளார். அப்போது, நல்லபாம்பு ஒன்று உள்ள சுருண்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி கையில் இருந்த ஷூவை தூக்கி வீசிவிட்டு, அலறியபடி வீட்டிற்குள் சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் அந்த ஷூவை ஒரு பாத்திரம் கொண்டு மூடி வைத்துவிட்டு, பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிக்கும் நபர் பாம்பை லாவகரமாக பிடித்து தேனி வீரப்ப அய்யனார் கோவில் மாலைப்பகுதியில் பத்திரமாக விட்டார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP