தேவன் வருகை சமீபத்தில் இருக்கிறது !

இயேசுவின் 2வது வருகை இருக்கும். இதனால் கிறிஸ்தவர்களே பரலோக ராஜியம் சமீபமாக இருக்கிறது. இந்த உலகை விட்டு செல்ல மூட்டை முடுச்சுகளை கட்டிக் கொள்ளுங்கள்.
 | 

தேவன் வருகை சமீபத்தில் இருக்கிறது !

இயேசுவின் மறுவருகை பற்றி வேத வசனங்கள் பல அடையாளங்களை எடுத்துக்காட்டுகிறது. அதில் அந்திகிறிஸ்துகள் தோன்றுவார்கள் என்பது முக்கியமானது. அந்திகிறிஸ்துகள் நானே இயேசு என்று கூறும் அளவிற்கு மாறிவிடுவார்கள். அவர்கள் வேத  வசனங்களை திரித்து கூறுவார்கள் என்று வேதம் சொல்கிறது.  வெளிப்படுத்தின சுவிஷேசம் 13ம் அதிகாரம் 6வது வசனத்தில் அந்தி கிறிஸ்துவின் பணி எப்படி இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அது தேவனை தூஷிக்கும்படி தன் வாயை திறந்து, அவருடைய நாமத்தையும் அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாக இருக்கிறவர்களையும் தூஷித்தது என்றும் குறிப்பிடப்படுள்ளது. 

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் அறிமுகமானதில் இருந்து சமீப காலம் வரை நடந்த பிரச்சாரங்கள், ஜெபங்களுக்கும் தற்போது நடக்கும் பிரச்சாரங்கள், ஜெபங்களுக்கும் மிகுந்த வேறு பாடுகள் உள்ளன. 

கிறிஸ்தவர்கள் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு வந்த போது அவர்கள் பிராமணர்களை வளைத்து போட்டு பைபிளை எழுத வைத்தார்கள். இதற்கு ஆதியாகமம் தொடங்கி  வெளிப்படுத்தினசுவிஷேசம் வரை உள்ள சமஸ்கிருத வார்த்தைகளே சாட்சி. ( இதை மறுப்பவர்கள் தற்போது படித்தவர்கள் ஆங்கிலம் கலந்து பேசுவது போல தமிழகத்தில் கடந்த காலத்தில் படித்தவர்கள் சமஸ்கிருதம் கலந்து எழுதினார்கள், பேசினார்கள் அதில் பிராமணன் பிராமணன் அல்லதவர் வேறுபாடு இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்).

தேவன் வருகை சமீபத்தில் இருக்கிறது !

இதனால் பைபிள் வசனத்தை திரித்து கூறுபவர்கள் இந்து மதத்தில் இருந்து சில வார்த்தைகளை பாடல்களை எடுத்துக் கொண்டு வாதிடுவார்கள். இது போன்ற திரிப்புகார்களைதான் வேதம் அந்திகிறிஸ்து செய்வார்  என்று குறிப்பிடுகிறது 

இயேசு பிறந்து 2018 ஆண்டுகள் கடந்து விட்டது என்பதை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்கிறர்கள். ஆனால் சங்க காலமே கூட கி.மு 4ம் நுாற்றாண்டு தொடங்கி, கிபி. 2 ம் நுாற்றாண்டு வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும் போது அதற்கு பல நுாற்றாண்டுகள் முந்தைய வேதங்களில் சைவ, வைணவ சித்தாந்தங்களில் இயேசு பற்றிய குறிப்புகள் உள்ளன என்று பேசுவது, கருத்தரங்கம் நடத்துவது எல்லாம் அபத்தம். 

கிறிஸ்தவர்களுக்குள் மிகப் பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக இருப்பது இயேசுவின் நாமத்தில் ஞானஸ்தானம் எடுப்பதா, பிதா,குமாரன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஞானஸ்தானம் எடுப்பதா என்பது. ஏசுவின் நாமத்தில் ஞானஸ்தானம் எடுப்பவர்கள் ஏகத்துவவாதிகள் என்றும், மற்றவர்கள் திரித்துவாதிகள் என்று குறிப்பிடப்படுவார்கள். இருவரும் தங்கள் கருத்துக்களுக்கு ஆதரவாக பைபிள் வசனங்களை சுட்டிக் காட்டுவார்கள். ஆனால் கோவையில் சமீபத்தில் நடந்த கருத்தரங்குகள் உள்ள அந்திக்கிறிஸ்துகள் கொண்ட சபை திருத்துவ கடவுள் இயேசுவை விளக்கும் திருக்குறள் என்று தலைப்பு வைத்துள்ளது. 

தேவன் வருகை சமீபத்தில் இருக்கிறது !

திருக்குறள் வாழ்வியல் கண்ணாடி. அதில் எந்த கடவுளின் பெயரையும் திருவள்ளுவர் குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும் போது  குறள்களுக்கு எந்த இறைவனையும் குறிப்பிட்டுக் கொள்ளலாம். இது போல தான் சைவ, வைணவ, இலக்கியங்களையும் அவர்கள் வம்புக்கு இழுத்துள்ளனர். சைவ, வைணவ பெரியவர்கள் தெளிவாக சிவன், பெருமாள் என்று தங்களின் வழிபடு தெய்வம் பற்றி வெளிப்படுத்தி இருக்கும் போது, இவர்கள் அதை இயேசு என்று பேசப் போவது எந்த விதமான பலனைத்தரும். 

தேவன் வருகை சமீபத்தில் இருக்கிறது !

உண்மையில் இவர்கள் இயேசு குறித்து விழிப்புணர்வு இல்லாத மக்களுக்கு சுவிஷேசம் சொல்ல வேண்டும் என்றால் பைபிளை, இயேசு செய்த அற்புதங்களை மட்டும் கூறினால் போதும். ஆனால் இவர்கள் நோக்கம் இயேசுவை அறிமுகம் செய்வது அல்ல. இயேசுவை வைத்து கலவரத்தை தூண்டுவது. மக்கள் மத்தியில் குழப்பதை உருவாக்கி அந்திகிறிஸ்துக்களான தங்கள் ஆளுமையை நிலைநாட்டுவது தான் அவர்களின் நோக்கம். 

தேவன் வருகை சமீபத்தில் இருக்கிறது !

இதனை சமீபத்தில் லயோலா கல்லுாரியில் நடந்த ஓவிய கண்காட்சி, திருச்சி ஜோசப் கல்லுாரியில் தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் கருத்தரங்கம், கோவையில் நடக்க உள்ள வெளிச்சத்தை நோக்கி கருத்தரங்கம் போன்றவை மூலம் உணர முடியும். இவற்றி்ல் இவர்கள் பேசப் போவது அனைத்துமே பேத்தியை போலவே பாட்டி இருக்காங்க என்றுதான். அவர்கள் கருத்தரங்கம் குறித்து மிப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்வார்கள். அது தொடர்பாக கருத்து மோதல் வெடிக்கும், இந்துகள் ,கிறிஸ்தவர்கள் மோதிக் கொள்வார்கள். தங்கள் பெயர் பிரபலமாகும். திருச்சியில் நடந்தது போலவே கோவையிலும் கடைசி நிமிடத்தில் கருத்தரங்கை நடத்தாமல் கைவிடுவார்கள். இதனால் ஏசுவின் பெயராலே இந்த சாத்தான்கள் குளிர்காய்வார்கள்.  சமீபத்தில் திரைப்படங்களில் அரசியல் பேசி ஓடாத சினிமாவை ஓட வைப்பதற்கு இணையானது தான் இது போன்றவையும். 

தேவன் வருகை சமீபத்தில் இருக்கிறது !

எந்த தடையும் இல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடப்பது அந்தி கிறிஸ்து வந்து விட்டார் என்பதைத்தான் காட்டுகிறது. இதைத் தொடர்ந்து வெளிப்படுத்தின சுவிஷேங்களில் காணப்படும் அடையாளங்கள் நடைபெறும். அதைத் தொடர்ந்து இயேசுவின் 2வது வருகை இருக்கும். இதனால் கிறிஸ்தவர்களே பரலோக ராஜியம் சமீபமாக இருக்கிறது. இந்த உலகை விட்டு செல்ல மூட்டை முடுச்சுகளை கட்டிக் கொள்ளுங்கள். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP