காதலி தற்கொலை!! இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை!! அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்!!!

காதலி தற்கொலை.. காதலன் வெட்டிக்கொலை.. அடுத்தடுத்த நாளில் சோகமும் பதற்றமும்!!
 | 

காதலி தற்கொலை!! இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை!! அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்!!!

கோட்டக்குப்பம் பகுதியில் இறந்த காதலி துக்கத்திற்கு வந்த காதலன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதுச்சேரி அருகேயுள்ள கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராகவன் ஹைதராபாத்தில் கணனி பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரும் அதேபகுதியை சார்ந்த அருணா என்ற இளம்பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அருணாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். எனினும் இருவரும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர். அவ்வப்போது ஊருக்கு வரும் ராகவன், காதலியை பார்த்துவிட்டு செல்வதும், செல்போனினும் அடிக்கடி பேசியும் வந்துள்ளார். காதலி தற்கொலை!! இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை!! அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்!!!

இதனை பெண்ணின் பெற்றோர் கண்டிக்கவே இரண்டு தினங்களுக்கு அருணா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காதலி இறந்த செய்தியை அறிந்த ராகவன் கடைசியாக ஒருமுறையாவது காதலியின் முகத்தை பார்க்க வேண்டும் என கோட்டக்குப்பம் திரும்பினார். இதனை அறிந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச்சென்று கோட்டைமேடு பகுதியில் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியுளளனர்.

காதலி தற்கொலை!! இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை!! அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்!!!தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் துணை காவல் கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த காதலியின் உடலை பார்க்கவந்த காதலனை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தற்கொலை செய்துக்கொண்ட அருணாவின் உறவினர்கள் தான் ராகவனை கொலை செய்திருக்க வேண்டு என அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP