விரைவில் திருமணம்!! சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண்!! உருக வைக்கும் வீடியோ பேட்டி!!

உலகம் முழுவதுமே கொரோனா வைரஸ் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று வரை உலக மக்களை பெரும் அச்சுறுத்தலுடனேயே வைத்திருக்கிறது. உலக சுகாதார நிறுவனம், இந்த கொரோனா வைரஸுக்கு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறிவிட்ட
 | 

விரைவில் திருமணம்!! சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண்!! உருக வைக்கும் வீடியோ பேட்டி!!

உலகம் முழுவதுமே கொரோனா வைரஸ் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று வரை உலக மக்களை பெரும் அச்சுறுத்தலுடனேயே வைத்திருக்கிறது. உலக சுகாதார நிறுவனம், இந்த கொரோனா வைரஸுக்கு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறிவிட்டன. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட பின்னர், சீனாவில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை தனி விமானம் மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அப்போது, நாடு திரும்ப தயாரான இந்தியர்களில் ஆந்திராவை சேர்ந்த ஜோதி என்ற இளம்பெண்ணும் இருந்தார். 

விரைவில் திருமணம்!! சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண்!! உருக வைக்கும் வீடியோ பேட்டி!!

இந்திய பெண் ஜோதிக்கு அப்போது காய்ச்சல் இருந்த காரணத்தினால், அவரை மீட்டு வருவதில் சிக்கல் எழுந்து, அவரை விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் ஜோதிக்கு நாட்களில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், இன்று வரையில் ஜோதி இந்தியா திரும்பாதது அவரது குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ஜோதியை இந்தியா அழைத்து வருவது குறித்து, நேற்று டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்ததாக ஜோதியின் தாயார் பிரமீளா தேவி தெரிவித்தார். 

விரைவில் திருமணம்!! சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண்!! உருக வைக்கும் வீடியோ பேட்டி!!

மத்திய காவல் படையில் பணிபுரிந்த ஜோதியின் தந்தை மஹேஷ்வர் 5 வருடங்களுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த வருடம் பி.டெக் படிப்பை முடித்த ஜோதி, 98 பேருடன் சீனாவில் உள்ள வுஹான் நகரில் இருக்கும் நிறுவனத்தில் பயிற்சிக்காக பணியில் சேர்ந்தார்.  இன்னும் சில நாட்களில் ஜோதிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக திருமண மண்டபத்தை எல்லாம் முன்பதிவு செய்துவிட்டு, ஜோதியின் வரவுக்காக காத்திருக்கிறார் அவரது தாயார். சீனாவிற்கு செல்லும் முன்புதான் ஜோதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.  

விரைவில் திருமணம்!! சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண்!! உருக வைக்கும் வீடியோ பேட்டி!!

சீனாவில் ஜோதி தற்போது வேலைப் பார்த்து வரும் நிறுவனம் கொடுத்திருக்கும் தங்கும் விடுதியில் தனியே தங்கியிருக்கிறார். அவரை சுற்றி நான்கு சுவர்கள் மட்டுமே. கொரோனா அச்சத்தினால் ஜன்னலை கூட ஜோதி திறப்பதில்லை என்கிறார் அவரது தாய் பிரமீளா.

 

சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஜோதியின் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும், இந்திய தூதரகம் தொடர்ந்து ஜோதியுடன் தொடர்பில் இருப்பதாகவும், சீனாவிலிருந்து விரைவாக அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP