வேட்பு மனு நிராகரிப்பால் செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி..

வேட்பு மனு நிராகரிப்பால் செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி..
 | 

வேட்பு மனு நிராகரிப்பால் செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி..

தஞ்சையில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.  

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 10வது வார்டில் போட்டியிட ஆனந்தன் என்பவர் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் அருகிலுள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து சென்ற போலீசார், ஆனந்தனிடம் நைசாக பேசி டவரில் இருந்து கீழே இறக்கியதோடு அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP