குடிபோதையில் சாக்கடைக்குள் ஓய்வெடுக்கும் இளைஞர்: வைரலாகும் வீடியோ!

தமிழகத்தில் இன்றைய இளைஞர்களில் பலர் குடிபோதைக்கு அடிமையாகி இருப்பது தமிழகத்தின் எதிர்காலம் குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

குடிபோதையில் சாக்கடைக்குள் ஓய்வெடுக்கும் இளைஞர்: வைரலாகும் வீடியோ!

தமிழகத்தில் இன்றைய இளைஞர்களில் பலர் குடிபோதைக்கு அடிமையாகி இருப்பது  தமிழகத்தின் எதிர்காலம் குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில், அரசின் அனுமதியோடு மது விற்பனை நடைபெற்று வருகிறது. இது பல குற்றச் சம்பவங்கள் நடப்பதற்கு காரணமாக இருப்பதோடு, இன்றைய தலைமுறையினர் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமங்கள், நகரங்கள் என்று எங்கு சென்றாலும், நியாயவிலைக்கடைகளில் நிற்கும் கூட்டத்தை விட அதிக கூட்டம் மதுக்கடைகளில் நிற்கிறது. 

பெண்கள் குடும்பத்தில் சிக்கனத்தை கடைபிடிக்க நியாயவிலைக்கடைகளில் போட்டி போடுகிறார்கள். ஆனால் மற்றொருபுறம் ஆண்கள் கடன் வாங்கிக்கொண்டு மதுக்கடையில் போட்டி போடுகிறார்கள். 

அதிலும், இளைய தலைமுறையினர் பலரும் மதுவுக்கு அடிமையாகி இருப்பது தமிழகத்தின் எதிர்காலம் குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் இளைஞர் ஒருவர் சாக்கடையில் உறங்கி கொண்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மதுக்கடைகளை மூடி இளைஞர்களின் கவனத்தை மதுவின் பக்கம் செல்லாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே குடும்ப தலைவிகள் மற்றும் தந்தையின் குடிபோதையால் வாழ்க்கையை தொலைத்த குழந்தைகளின் மிகப்பெரும் கதறலாக உள்ளது. அதுமட்டுமின்றி மதுக்கடைகளை மூடுவதால் இனி வரும் தலைமுறையாவது மதுவுக்கு அடிமையாகாமல் ஓரளவு காத்துக்கொள்ள முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP