வாக்காளர் பட்டியலில் நீங்களே திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!

வாக்காளர் பட்டியலில் ஏதேனும் பிழைகள் இருந்தால் நாளை முதல் ஆன்லைன் மூலமாக சரி செய்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
 | 

வாக்காளர் பட்டியலில் நீங்களே திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!

வாக்காளர் பட்டியலில் ஏதேனும் பிழைகள் இருந்தால் நாளை முதல் ஆன்லைன் மூலமாக சரி செய்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர்  தகவல் தெரிவித்துள்ளார். 

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர்கள் நாளை முதல் தங்களது விவரங்களில் பிழை ஏதும் இருந்தால் அதனை திருத்திக் கொள்ளலாம்.

NVSP App என்ற புதிய மொபைல் செயலி மூலமாக இதனை அவர்கள் செய்ய முடியும். இந்த செயலி ஒரு மாத காலத்திற்கு செயல்பாட்டில் இருக்கும். அதாவது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வாக்காளர்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம், பாலினம் உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தால் மொபைல் செயலி மூலமாக அவர்கள் திருத்தம் மேற்கொள்ளலாம்.

இதுதவிர இந்த வாரமும், அடுத்த வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அதன் வாயிலாகவும் வாக்காளர்கள் திருத்தங்களை மேற்கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP