பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! - அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள், துணை பொதுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
 | 

தமிழகத்தில் பிளஸ் 1 மாணாக்கர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள், கடந்த மே 8ம் தேதி வெளியானது. இந்தத் தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் துணைப் பொதுத்தேர்வு எழுதலாம் என்று அரசுத்தேர்வுகள் துறை இயக்குனரகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. 

அதன்படி, ஜூன் மாதம் நடைபெறவுள்ள துணைப் பொதுத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், இன்று பிற்பகல் முதல் மே 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், தனித்தேர்வர்கள் ஆன்லைன் அல்லது தேர்வு மைய பள்ளிகள் மூலமாகவும், பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 துணை பொதுத்தேர்வுகள் ஜூன் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP