பிரதமர் மோடியைத் தொடர்ந்து யோகி, அமித் ஷாவும் தமிழகம் வருகை: தமிழிசை தகவல்!

வருகிற 12ம் தேதி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திருநெல்வேலி வருகிறார். தொடர்ந்து 14ம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஈரோடு வருகிறார். 15ம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்னை வருகிறார்.மீண்டும் பிரதமர் மோடி 19ம் தேதி கன்னியாகுமரி வருகிறார்.
 | 

பிரதமர் மோடியைத் தொடர்ந்து யோகி, அமித் ஷாவும் தமிழகம் வருகை: தமிழிசை தகவல்!

பிரதமர் மோடியைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத், அமித் ஷா, நிதின்கட்கரி உள்ளிட்டோர் தமிழகம் வரவிருப்பதாக தமிழிசை தகவல் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளிடம் பேசிய தமிழிசை, "தமிழகத்தில் பாஜக காலூன்றி வருகிறது. பிரதமர் மோடி வருகிற 10ம் தேதி திருப்பூர் வரவிருக்கிறார். அவர் வருவதையடுத்து, அதற்கான ஏற்பாடுகள் செய்வது குறித்த கூட்டம் திருப்பூரில் இன்று நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவே நான் திருப்பூர் சென்று செல்கிறேன். 

பிரதமர் மட்டுமல்லாமல் பல்வேறு தலைவர்கள் தமிழகம் வருகின்றனர். வருகிற 12ம் தேதி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திருநெல்வேலி வருகிறார். தொடர்ந்து 14ம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஈரோடு வருகிறார். 15ம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்னை வருகிறார்.மீண்டும் பிரதமர் மோடி 19ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். தமிழகத்தில் மக்களிடையே பாஜக ஐக்கியமாகி வருகிறது. எனவே, தமிழகத்தில் பாஜக காலூன்றும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

திமுக தலைவர் ஸ்டாலின் இந்து மக்களை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருகிறார். சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு குறித்து அவர் வாய் திறக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடி வரும்போது மட்டும் வைகோ, ஸ்டாலின் உள்ளிட்டோர் கறுப்புக்கொடி காட்டுகின்றனர். எனவே கருப்புக்கொடி காட்டும் இந்த சின்னக் கூட்டத்தை பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம்.  ஒரு சிறு எலியை பார்த்து யானை பயப்படாது. ஆக்கபூர்வமான அரசியலை செய்யவே நாங்கள் விரும்புகிறோம். . இந்த விஷயத்தை நான் மக்களிடமே விட்டுவிடுகிறேன்.

மேலும், தமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்துச் செல்லும் பிரதமர் மோடி வேண்டுமா? அல்லது கிளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வைகோ, ஸ்டாலின் உள்ளிட்டோர் வேண்டுமா? என்பதை மக்களே முடிவு செய்யட்டும்" என்று பேசினார். 

newstm.in

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP