பாஜக எம்.எல்.ஏக்களுடன் எடியூரப்பா அவசர ஆலோசனை!

கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக எம்.எல்.ஏக்களுடன் அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
 | 

பாஜக எம்.எல்.ஏக்களுடன் எடியூரப்பா அவசர ஆலோசனை!

கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக எம்.எல்.ஏக்களுடன் அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். 

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நாள் முழுவதும் நடைபெற்றது. சபாநாயகர் வேண்டுமென்றே நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்துகிறார் என்று எடியூரப்பா குற்றம் சாட்டியிருந்தது  குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா,  "குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. ஆனால், ஆட்சியை தக்க வைக்க அவர்கள் முறையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாங்கள் மிகவும் பொறுமை காத்து வருகிறோம். அவர்களது கூட்டணி கட்சிக்கு 98 இடங்கள் மட்டுமே உள்ளது. இன்றைக்காவது சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்று கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP